பக்கம்:திருக்குறள் கதைகள்.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிழல் 75;

  • சரி. இந்த மாதத்திலேருந்து எல்லா வீட்டுக்கும். வாடகையைப் பதினைந்து ரூபாயாக்கி விடுங்கள் ; போங்க, அதுக்குத்தான் கூப்பிட்டேன்.'

சாரங்கபாணியின் மனம் ஒரளவு நிம்மதியடைந்தது. நாராயணசாமி குடியிருக்கும் வீட்டுக்கு மட்டும் தனியாக வாடகையைக் குறைத்தால் அவன் அதை ஒப்புக்கொள்ள மாட்டான் என்றே எல்லா வீடுகளுக்கும் வாடகையைக் குறைத்துவிட்டார். இந்தச் செய்கை அவர் மனத்துக்குப் பெருத்த ஆறுதலை அளித்தது. காரியதரிசி போய்விட்டார். சற்று நேரத்துக்கெல்லாம் டெலிபோன் மணி ஒலிக்கவே சாரங்கபாணி எழுந்துபோய் ரிஸிவரைக் கையில் எடுத்தார்.

  • ஸார், நம் மில்லுக்கு வேபர் ஆபீசர் வந்திருக்கிரு.ர். 'ரிட்ரெஞ்ச்மெண்ட் விஷயமா உங்களோடு பேசனுமாம்” என்ருர் மில் மானேஜர்.

அப்படியா கொஞ்ச நேரத்திலே நா ன் அங்கே. வரேன்' என்று பதில் கூறிவிட்டு உடனே மில்லுக்குப் புறப் பட்டார் சாரங்கபாணி. - 8 இதோ, இந்த ரிக்கார்டுகளை யெல்லாம் தாங்கள் நன்ருகப் பார்த்துவிட்டுப் பிறகு முடிவு செய்யுங்கள். நான் செய்தது சரியா தவரு என்பது தங்களுக்கு அப்போது தான் தெரியும், இரண்டு வருடங்கள் மில்லை நஷ்டத்தில் நடத்திய பிறகே இந்த முடிவுக்கு வந்தேன். 130 பேரை எடுத்தால்தான் மற்றத் தொழிலாளர்கள் காப்பாற்றப்படு: வார்கள் என்ற நிலை ஏற்பட்டதாலேயே இந்தக் காரியத் தைச் செய்தேன். இதை ஆட்சேபித்து லேபர் இலாகாவுக்கு, யாரோ சிலர் பெட்டிஷன் எழுதிப் போட்டிருக்கிரு.ர்கள். தாங்கள் எல்லா விவரங்களையும் ஆராய்ந்து பார்த்து, விசா ரிக்க வேண்டியவர்களை விசாரியுங்கள் ; கடைசியில் தாங்கள் எந்த முடிவுக்கு வந்த போதிலும் அதை நான்