பக்கம்:திருக்குறள் கதைகள்.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* 6 திருக்குறள் கதைகள் அப்படியே ஏற்றுக் கொள்கிறேன். இரண்டு இயந்திரங்கள் உபயோகமற்றுப் போய் விட்டன. மேலும் பருத்தி அதிக மாகக் கிடைக்கவில்லை. இந்த நிலையில் நான் என்ன செய்வது ? தொழிலாளர்களை வேலையை விட்டு நீக்கியதில் என்னைக் காட்டிலும் வருத்தப்படுகிறவர்கள் யாரும் இருக்க முடியாது. அவர்களே மீண்டும் வேலையில் சேர்த்துக் கொள் வதற்குத் தங்களுக்கு ஏதேனும் வழி புலப்பட்டாலும் சொல் லுங்கள் : மகிழ்ச்சியுடன் நிறைவேற்றி வைக்கிறேன்." சுருக்கமாகவும் விவரமாகவும் எடுத்துக் கூறினர் சாரங்க பாணி. அவருடைய நியாயமான பேச்சைக் கேட்ட லேபர் ஆபீஸர் மெளனமாகத் தலையை ஆட்டியபடியே உட்கார்ந் திருந்தார். சாரங்கபாணியிடம் அவரால் எவ்விதக் குற்றத் தையும் காண முடியவில்லை. நான் என் கடமையைச் செய்யவே இங்கு வந்திருக் கிறேன். தங்கள் நிலை என்ன என்பது பற்றி எனக்கு நன்ருகப் புரிகிறது. தங்கள் குணத்தைப்பற்றியும் நான் ஏற்கெனவே அறிந்திருக்கிறேன். எதற்கும் வேலையிழந்த தொழிலாளர் களில் சிலரையும் பார்த்துப் பேச முடிவு செய்திருக்கிறேன். தங்களுக்குச் சிரமம் கொடுப்பதற்காக மன்னிக்கவும் என்ருர் லேபர் ஆபீஸர். லேபர் ஆபீஸர் கேட்கும் எல்லா ரிக்கார்டுகளையும் எடுத்துக் காட்டும்படி மானேஜருக்கு உத்தரவு போட்டு விட்டு வீட்டுக்குப் புறப்பட்டுச் சென்ருர் சாரங்கபாணி. இதற்குள் ஆதாரமற்ற வதந்தி ஒன்று மில் முழுதும் பரவி விட்டது. - * எல்லாரையும் மறுபடியும் வேலைக்கு வெச்சுக்கச் சொல்லி லேபர் ஆபீஸர் உத்தரவு போடப் போருராம் என்பதே அந்த வதந்தி. இந்த ஆதாரமற்ற வதந்தியைப் பத்திரிகைகள் உண்மைச் செய்தி போல் திரித்துக் கொட்டைத் தலைப்பில் கீழ்வருமாறு பிரசுரம் செய்தன :