பக்கம்:திருக்குறள் கதைகள்.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிழல் S9. கொண்டு அழைத்து வந்து புதுப்பாயில் உட்காரவைத்தான். வடிவேலுவும் பாப்பாவும் திருமணக் கோலத்துடன் முதலா வரியின் முன்வந்து கும்பிட்டு நின்றனர். முதலாளி அவர் களை மனமார வாழ்த்திவிட்டு மாப்பிள்ளையை உற்று நோக்கி ஞர். வாச்மேன் வடிவேலுதான் மாப்பிள்ளை என்கிற விஷயம் அப்போதுதான் அவர் நினைவுக்கு வந்தது. 'அடாடா அவனுக்கும் அல்லவா வேலை போய்விட்டது ?" அவரால் அதற்குமேல் அங்கே தாமதிக்க முடியவில்லை. நான் வருகிறேன், நாராயணசாமி முடிந்தால் நாளைக்கு என் வீட்டுப்பக்கம் வந்துவிட்டுப் போ என்று அவனிடம் சொல்லிக்கொண்டு வீட்டுக்குப் புறப்பட்டுச் சென்ருர் அவர். - மறுநாள் காலே நாராயணசாமி அவர் வீட்டுக்குப் போயிருந்தான். - 'நாராயணசாமி! உன்னிடம் சில முக்கியமான விஷயங் கள் பேசவே உன்னை வரச்சொல்லியிருந்தேன். உன் குடும்பத் துக்கு நான் எந்த விதத்திலாவது உபகாரம் செய்யவேண்டு மென்று நீண்ட நாட்களாக எண்ணிக்கொண்டிருக்கிறேன். ஆனல் நீயோ என்னிடமிருந்து எவ்வித உதவியும் ஏற்றுக் கொள்ள மறுக்கிருய். நான் நினைப்பதற்கு நேர்மாருக என்னுல் உன் குடும்பத்துக்குப் பல கஷ்டங்கள் நேர்ந்து விட்டன. முதலில், மில்லில் நஷ்டம் ஏற்பட்டதால் நீ வேலேயிலிருந்து விலகும்படி நேர்ந்தது. இப்போது, குவார்ட்டர்ஸை விற்கப்போக அதனால் நீ குடியிருக்கும் வீட்டையே காலி செய்யும்படி ஆகிவிட்டது. போதாததற்கு, உங்க மாப்பிள்ளை வடிவேலுக்கும் வாச்மேன் வேலை போய் விட்டது.”* இதுக்கெல்லாம் நீங்க வருத்தப்படலாமா ? உங்க மனசு எனக்குத் தெரியாதா? நீங்க திம்மதியா இருங்க” என்ருன் நாராயணசாமி. w

  • உன்னிடம் ஒரு முக்கியமான பொறுப்பை ஒப்படைக் கப் போகிறேன். அதாவது மில் தொழிலாளர்களுக்குக் குறைந்த விலையிலே எல்லாச் சாமான்களும் கிடைக்க வழி