பக்கம்:திருக்குறள் கதைகள்.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 திருக்குறள் கதைகள் அனுப்பி டாக்டரை அழைத்து வரச்சொன்னர். டாக்டர் வந்ததும் அவரைப் பரிசோதித்துப் பார்த்துவிட்டு, ' தற் போதைய உடல் நிலையில் தங்களுக்கு அதிக சந்தோஷமோ துக்கமோ ஏற்படக்கூடாது. பூரண ஒய்வு எடுத்துக்கொள்ள வேண்டும். யாருடனும் அதிகம் பேசக்கூடாது ' என்று எச்சரித்து விட்டுப் போளுர். - முதலாளிக்கு உடம்பு சரியில்லே என்னும் தகவல் இதற் குள் ஆலைத்தொழிலாளிகள் அனைவருக்கும் எட்டிவிட்டது. அவர்கள் எல்லாரும் கூட்டமாகப் பங்களா வாசலில் வந்து கூடிவிட்டனர். - அன்று மாலேயே சாரங்கபாணி ஒரு முடிவுக்கு வந்து விட்டார். தம்முடைய காரியதரிசியை அழைத்து, இனி நான் அதிக நாள் உயிர் வாழ மாட்டேன். என்னிடம் இத்தனை அன்பும், மதிப்பும், நம்பிக்கையும் வைத்துள்ள தொழிலாளர்களுக்கு என் உயிர் போவதற்குள் ஏதாவது செய்துவிட வேண்டும். நம்முடைய வக்கீலை அழைத்துவரச் சொல்லுங்கள் ' என்ருர். a வக்கில் வந்ததும், வக்கில் ஸார் ! என் கடைசிக் காலம் நெருங்கி விட்டது. நான் இனி அதிக நாள் இருக்க மாட்டேன். எனவே,வாரிசு இல்லாத என் சொத்துக்களுக்கு வாரிசு ஏற்படுத்த விரும்புகிறேன். என்னுடைய மில்லை, அதில் வேலை செய்யும் எல்லாத் தொழிலாளர்களுக்கும் பொதுச் சொத்தாக்கி அதில் வரும் இலாபத்தை அவர்களே சமமாகப் பங்கிட்டுக் கொள்ள வேண்டும். இதற்கு ஒரு டிரஸ்ட் ஏற்படுத்திவிட விரும்புகிறேன். * அடுத்தபடியாக ஸ்டோரை நாராயணசாமிக்கு உரிமை யாக்கி அவன் பெயருக்கே மாற்றி எழுதிவிட வேண்டும். நாளைக்கே உயிலை எழுதிக்கொண்டு வந்து விடுங்கள். நான் கையெழுத்துப் போட்டு விடுகிறேன் ' என்ருர் சாரங்க பாணி. - வக்கீல் எழுந்து போனதும் சாரங்கபாணி மானேஜரை அழைத்துக் 'குவார்ட்டர்ஸ் விற்ற பணம் கைக்கு வந்ததும் பம்பாயிலுள்ள இயந்திரங்களைக் கொண்டு வர உடனே ஏற்பாடு செய்யுங்கள். அந்த இயந்திரங்கள் வந்து வேலை