பக்கம்:திருக்குறள் கதைகள்.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிழல் 93 செய்யத் தொடங்கிவிட்டால் நம் மில்லிலிருந்து நீக்கப்பட்ட அத்தனை தொழிலாளர்களையும் மறுபடியும் வேலையில் சேர்த்துக் கொண்டு விடலாம்' என்ருர். . ஏன் இப்படியெல்லாம் பேசுறிங்க ? அதெல்லாம் உங்க ளுக்கு ஒன்றும் இராது ' என்ருர் மானேஜர். . இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் சில தினங்களுக்குள்ளா கவே, வாழ்வின் பயன அடைந்துவிட்ட மனநிறைவுடன் சாரங்கபாணி கண்களை மூடிவிட்டார். அன்று அந்த ஊரே சாரங்கபாணியின் பங்களாவில் கூடியிருந்தது. சாரங்க பாணியின் அந்திம ஊர்வலம் புறப்பட்டதும் அவ்வளவு பேரும் கண்ணிர் வடித்தபடியே ஊர்வலத்துக்குப் பின்னல் நடந்துபோய்க் கொண்டிருந்தார்கள். அவருடைய ஈமச் சடங்குகளை நாராயணசாமியே முன்நின்று செய்து முடித் தான். அவன் நெருப்புச் சட்டியுடன் தலைகுனிந்த வண்ணம் முன்னல் செல்ல, தொழிலாளர்கள் தோள்மீது சாரங்க பாணி தமது கடைசி யாத்திரையைச் செய்து கொண்டிருந் தார். அந்தக் காட்சி எல்லாரையும் உலுக்கிவிட்டது. 15 ' என்ன, கண்ணம்மா, உனக்கு என்ன வேனும் ? . என்று கேட்டான் நாராயணசாமி. அரிசி. சரி. கியூவில்ே நில்லு. யாராயிருந்தாலும் வரிசையிலே நின்னத்தான் கிடைக்கும்.' . கியூவிலே நின்று அரிசியை வாங்கிக் கொண்டே கண் ணம்மா, விட்டுக்குப் புறப்பட்டாள். இதற்குள் கூட்டமும் கொஞ்சம் குறைந்தது. - கண்ணம்மா, எங்கே அதுக்குள்ளே கிளம்பிட்டே? இரு கொஞ்சம். இதோ வந்துடறேன். உங்கிட்டே கொஞ்சம் பேசனும் ' என்று கூறிய நாராயணசாமி, வடிவேலுவிட்ம் ஸ்டோரைக் கவனித்துக் கொள்ளச் சொல்லிவிட்டு வெளிய்ே வந்தான். . ; ' நீங்க எல்லாரும் சேர்ந்து செய்த காரியம் முதலாளி யின் உயிருக்கே எமன முடிஞ்சுட்டுது. இந்த மாதிரி ஒரு பழி தி. க.-7