பக்கம்:திருக்குறள் கதைகள்.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிழல் 95 ஆயினும், அவனுடைய இலட்சியம் இன்னும் பூர்த்தியாக வில்லையே வேலை இழந்த மில் தொழிலாளர்கள் எல்லாரும் மீண்டும் போய் மில்லில் சேர்ந்து விட்டார்கள். இருந்தா லும் ஊரில் இன்னும் எத்தனையோ தொழிலாளர்கள் வேலை இழந்து திண்டாடிக் கொண்டிருக்கிருர்களே? ஸ்ட்ோரில் வரும் இலாபத்தைக்கொண்டு அத்தகைய ஏழைத் தொழிலா ளர்களுக்கு நிரந்தரமான உதவி அளிக்க விரும்பினன் அவன். அதற்காக ஒரு சங்கத்தையே ஆரம்பித்து, வேலையின் றித் தவிக்கும் தொழிலாளர்களை அந்தச் சங்கத்தில் சேர்த் துக்கொண்டான். அவர்களுக்கு உண்ண உணவும், உடுக்க உடையும் கொடுத்து உதவிஞன். ஆங்காங்கு வேலை கிடைக் கும் போதெல்லாம் அவர்களுக்கு வேலையும் தேடித்தந்தான். ஆளுல் அவன் மட்டும் அந்தப் பழைய நூறு ரூபாயே பெற்றுக்கொண்டிருந்தான். . ஆண்டு விழா தினம். அழகாக அலங்கரிக்கப் பெற்று பந்தலில் ஆயிரக்கணக்கான பேர் அமர்ந்திருந்தார்கள். பிரமுகர்கள், பிரபலஸ்தர்கள், அரசியல் தலைவர்கள் அனை வரும் மேற்படி விழாவுக்கு விஜயம் செய்திருந்தனர். ஆண்டு விழாவை யொட்டி முதலாளி சாரங்கபாணியின் படத்தைப் பிரபலஸ்தர் ஒருவரைக்கொண்டு திறந்துவைத்தான் அவன். மேற்படி தலைவரின் சொற்பொழிவு முடிந்ததும் நாராயண சாமி சங்கோசத்துடன் எழுந்து நின்று பேசினன் : - இங்கே கூடியுள்ள தொழிலாளர்களே, பெரியவர் களே ! உங்கள் எல்லாருக்கும் என் வணக்கம். இன்று நம்ம சங்கத்திற்கு ஆண்டு விழா. நம்ம மில் தொழிலாளர்களில் ஒருவர்கட்ட இப்போ வேலையில்லாமலில்லை. இப்ப நம்ப முதலாளி உயிரோடு இருந்தால், ரொம்பச் சந்தோஷப் பட்டிருப்பாரு. கடைசி காலத்திலே அவர் ரொம்ப மனக்கஷ்டத்திற்கு உள்ளாகி இருந்தாரு. அது உங்களுக் கெல்லாம் தெரிஞ்ச சங்கதிதான். இத்தனைக்கும் பல பேருடைய நலனுக்காகத்தான் சில பேரை வேலையைவிட்டு எடுத்தாரு. அப்படி வேலை இழந்தவர்கள்கூட அவங்க வாழ்க்கையைப்பற்றி ரொம்பக் கவலைப்படவில்லை. ஆனல், அதை நினைச்சுநினைச்சு முதலாளிதான் ரொம்ப வருத்தப்