பக்கம்:திருக்குறள் கதைகள்.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கார்த்திகைத் திருநாள். ஊரே ஒளி மயமாய்த் திகழ்ந்து கொண்டிருந்தது. இல்லங்கள்தோறும் ஆண்ட வன் சரவிளக்குகளாகக் கொலுவிருந்து தீபச்சுடராகப் பிர காசித்துக்கொண் டிருந்தான். ஆண்களும், பெண்களும். சிறுவர்களும் மலர்ந்த முகத்தோடு மகிழ்ச்சி நிறைந்த உள்ளத்தேர்டு வீதிகளில் நடமாடிக் கொண்டிருந்தார்கள். சுந்தரமூர்த்தியின் பங்களா வாசலில் மட்டும்.ஓர் அசா தாரணச் சூழ்நிலை நிலவியது. வாசல் வராந்தாவில் சுந்தர, மூர்த்தியும் இன்னும் சிலரும் ஒரு மங்கள நிகழ்ச்சியை எதிர்பார்க்கும் ஆவலில் பங்களாவிற்குள் எட்டி எட்டிப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். நர்ஸ் ஒருத்தி அவ்வப்போது வெளியே வருவதும், அவர் க்ளுக்கெல்லாம் உதட்டினல் சமிக்ஞை கர்ட்டுவதும், மீண்டும் உள்ள்ே ச்ெல்வதுமாக இருந்தாள்.