பக்கம்:திருக்குறள் கதைகள்.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 திருக்குறள் கதைகள் லேடி டாக்டரும், நர்ஸும் வந்து இரண்டு மணி நேரமாகிறதே இன்னும் ஒன்றும் தெரியவில்லையே' என்ற கவலையில் அமைதி இழந்தவராய்க் காணப்பட்டார் சுந்தர மூர்த்தி, - மணி ஏழு இருக்கும். அந்த ஆங்கிலோ இந்திய லேடி டாக்டர் புன்னகை பூத்த முகத்துடன் வெளியே வந்தாள். அவள் என்ன சொல்லப் போகிருள் என்பதை எதிர் பார்த்து எல்லாரும் அவள் முகத்தையே பார்த்துக்கொண் டிருந்தார்கள். மேல் பேபி பியூடிபுல் சைல்ட் ! கண்ணும் நோஸும் அளகா யிருக்குது !’ என்று தனக்குத் தெரிந்த கொச்சைத் தமிழில் கூறினுள் அவள். - சில விநாடிகளுக்கெல்லாம் உள்ளுக்குள் குழந்தையின் ‘முதல் முழக்கம் சுநாதமாய் ஒலிக்கத் தொடங்கியது. கங்ராஜுலேஷன்ஸ், மிஸ்டர் சுந்தரம் !" என்று சுந்தரமூர்த்திக்குத் தெரிந்தவர்கள் அவருடைய கையைக் குலுக்கி, தங்கள் பாராட்டுதல்களைத் தெரிவித்துக்கொண் டார்கள். - - . - . - அது ஆண் குழந்தையாகத்தான் பிறக்கும் என்று எனக்கு அப்போதே தெரியும் ' எனக் கூறி ஒரு சிலர் தங்க ளுடைய தீர்க்கதரிசனத்தை வெளிப்படுத்திக்கொண் டார்கள். - - - - சுந்தரமூர்த்தி அவர்கள் அனைவருக்கும் சர்க்கரையும், கற்கண்டும் வழங்கினர். - குழந்தை பிறந்த பத்தாவது தினத்தன்று சுந்தரமூர்த்தி யின் பங்களாவில் நாதஸ்வர இசை ஜாம் ஜாம் என முழங்கிக் கொண்டிருந்தது. - அன்றுதான் அவருடைய அருமைக் குழந்தையின் நாமகரண விழா ! - ஆயர்பாடியில் கோபியர்கள் கோகுல கிருஷ்ணனச் சூழ்ந்துகொண்டு கொஞ்சிக் குலவியதைப்போல், ஊர்ப்.