பக்கம்:திருக்குறள் கதைகள்.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளி 99s பெண்கள் அனைவரும் சுந்தரமூர்த்தியின் குழந்தையைச் சுற்றிச் சூழ்ந்துகொண்டார்கள். ஒருத்தி, குழந்தையை வாரி எடுத்து முத்தமிட்டாள். இன்னெருத்தி, அதன் உச்சி முகர்ந்து உள்ளம் மகிழ்ந் தாள். மற்ருெருத்தி, ' குழந்தையின் ஜாடை அம்மாவை அப்படியே உரித்து வைத்திருக்கிறது 1 என்று புகழ்ந்து, குழந்தையின் அப்பாவைக் கண் ஜாடையாகப் பார்த்துப் புன்னகை பூத்தாள். வேருெருத்தி, அதற்கும் பதில் சவால் கொடுப்பதுபோல் * அம்மா ஜாடை ஒன்றுமில்லை; அப்பா ஜாடைதான் ’’ என்ருள். குழந்தையோ இவர்களுடைய அசட்டுப் பேச்சைக் கேட்கச் சகிக்காததைப்போல் முகத்தைச் சுளித்துக் கொண்டது. பின்னர், வீட்டுக்குப் பெரியவர்கள் வந்து தாயையும் சேயையும் வைத்துத் திருஷ்டி சுற்றிப் போட்டார்கள். பிறகு, குழந்தையைப் பூமணித் தொட்டிலில் இட்டுத் தாலாட்டுப் பாடினர்கள். இந்தக் கோலாகலத்தையெல்லாம் கண்ட குழந்தை தன்னுடைய அழகிய செவ்விதழ் விரித்துச் சிரித்தது. குழந்தையின் தாய் தேவகி, தன்னுடைய அன்புக் கணவரை அருகில் அழைத்து, குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம் ?’ என்று கேட்டாள். " கார்த்திகைத் திருநாளன்று பிறந்திருக்கிருன் முருகக் கடவுளின் பெயர்களில் ஏதாவதொன்றை வைக்கலாம் ' என்ருர் சுந்தரமூர்த்தி. - ' குழந்தை மூக்கும் முழியுமாக அழகா யிருக்கிருன். கண்ணன் என்றே வைக்கலாம் ' என்று தன் ஆசையைத் தெரிவித்துக் கொண்டாள் தேவகி. •. -