பக்கம்:திருக்குறள் செய்திகள்.pdf/107

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
93


அரசன் மக்கள் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும். சட்டம் ஒழுங்காக இல்லாவிட்டால் களவு, கொலை இந் நிகழ்ச்சிகள் மிகுந்துவிடும்.

அரசன் அநீதிகள் இழைத்துக்கொண்டிருந்தால் மக்கள் எதிர்க்க முடியாது. ஆற்றாது அழும் கண்ணிர் வீண்போகாது. அஃது அவன் அழிவுக்குக் காரணம் ஆகிவிடும். காலம் வரும்போது அவன் ஆட்சி கவிழ்ந்துவிடும்.

மழைத்துளி பயிர்களுக்கு அவசியம்; அதுபோல் அரசனது நற்செய்கைகள் மக்களுக்கு அவசியம். அவன் ஈகைப் பண்பை மக்கள் பெரிதும் எதிர்பார்ப்பர்.

நாட்டில் அராஜகம் விளைந்தால் ஏழைகள் அதிகம் பாதிக்கப்படுவது இல்லை. செல்வர்கள் தம் உடைமையை இழப்பர்; அவர்கள் சொத்துகளுக்கும் பொருளுக்கும் பாதுகாப்பு இருக்காது. முதற்கண் அரசனே அவர்களை வருத்திப் பொருள் கேட்டுப் பெறுவான். செல்வர்கள் நிம்மதியாக வாழமுடியாது.

ஆட்சி சரி இல்லை என்றால் எந்தத் தொழிலும் சரிவர நடக்காது: பால்வளம் குறையும்; அந்தணர்கள் வேதம் ஓத இயலாது; அறவினைகளும், ஆக்கப் பணிகளும் செம்மையாக நடைபெறா.

57. வெருவந்த செய்யாமை (அச்சுறுத்தல் செய்யாமை)

குற்றவாளிகளைத் தண்டிப்பது அரசனின் கடமை யாகும்; அளவுகடந்து அவர்களுக்கு தண்டனை விதிக்கக் கூடாது. கடுமையாகத் தண்டிப்பது போலத் தோற்றம் அளிக்க