பக்கம்:திருக்குறள் செய்திகள்.pdf/110

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
96


இரக்கம் காட்டுதல் வேண்டும்; அதே சமயம் கடமையினின்று தவறக்கூடாது; சட்டதிட்டங்களையும் புறக்கணிக்காதே; அவற்றையே நன்மைக்குப் பயன்படுத்திச் செயலாற்றுக.

குற்றம் செய்தார் ஆயினும் கடுமையாகத் தண்டிக்க வேண்டும் என்பது இல்லை. சட்டங்கள் தண்டிக்க அல்ல; திருத்துவதற்கு ஏற்பட்டவை என அறிக.

நண்பர்களோ பகைவர்களோ நஞ்சைத் தந்தாலும் அச்சம் கொள்ளாமல் அமைதியாக ஏற்று அவர்களுக்கு இரக்கம் காட்டுதல் உயர் பண்பு ஆகும். பகைவனுக்கும் அருள் செய்யும் இரக்கப் பண்பும் கண்ணோட்டம் ஆகும்.

59. ஒற்றாடல்
(ஒற்றரைக்கொண்டு உளவுஅறிதல்)

பிறர் செய்யும் களவைத் தெரிந்துகொள்ள உளவு தேவையாகும். நாட்டு நடப்பியலை அறியவும், பகை நாட்டுப் போரியலைத் தெரிந்துகொள்ளவும் ஒற்றர்கள் தேவைப்படுவர். மற்றும் விஷயங்களை அறிந்துகொள்ள அவ்வத் துறைகளைப்பற்றிய நூல்களைக் கற்க வேண்டும். எட்டு அறிவும், ஒற்றர்கள் கொண்டுவந்து தரும் கூட்டு அறிவும் உண்மைகளை நிலைநாட்டத் தேவைப்படுவன ஆகும்.

அரசனது பார்வை விசாலமானதாக இருக்க வேண்டும். எங்கெங்கே என்ன நடக்கிறது? அதனை உடனுக்குடன் அவன் அறிய வேண்டும். விழித்துக் கண்மூடாத நிலையில் மூலை முடுக்குகள் எல்லாம் துருவி ஆராய்ந்து செய்தி கொண்டு தருபவர் அரசனுக்கு அவசியம் ஆகின்றனர். இவர்கள்