பக்கம்:திருக்குறள் செய்திகள்.pdf/144

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
130


கேடுகள் வரும்போதுதான் நம் உண்மையான நண்பர் யார் என்பதை உணர முடியும். எனவே நமக்குக் கேடுகள் வருவதும் ஒருவகையில் நல்லதே.

அறிவற்ற சிறுமைத்தனம் உடையவர்தம் நட்பை நீக்கி விடுவது ஒருவனுக்கு ஊதியம் என்று கொள்க.

ஊக்கம் குறையக் காரணமான செயல்களை நினைத்தும் பார்க்காதே; அதேபோலக் கஷ்ட காலத்தில் கைவிடும் அற்பர்களின் நட்பைக் கொள்ளாதே.

கெடுதி வரும்போது விடுதல் செய்யும் கீழ்மகனின் செயலை மறக்கவே முடியாது. சாகும்போதும் அஃது ஒரு வனை உறுத்திக்கொண்டே இருக்கும்.

மாசு அற்றவர் உறவினைப் பொருந்துக. காசு ஏதாவது தந்தும் ஒத்துவாராதவர் நட்பை விட்டுவிடுக.

81. பழைமை
(பழகிய உறவு)

பழைமை என்பது பழகிய தோஷம் என்று கூறலாம்; நண்பன் பழகிவிட்டவன்; அவன் நமக்கு எதிரிடையாக நடந்துகொண்டாலும் அதனைப் பெரிதாகப் பொருட் படுத்தாமல் விட்டுவிடுவது இதுதான் பழைமை; ஏன் விட்டுக்கொடுத்தாய் என்று கேட்டால் ‘பழகிய தோஷம்’ என்பர். அதனால் ஏற்படுகின்ற தீமைகளும் மன்னிக்கத் தக்கவை என்பதாகும். நட்புக் குறையாமல் காப்பதே பழைமை எனப்படும்.

நட்புக்கு அடையாளம் விட்டுக்கொடுத்தல்; உரிமைகளை விட்டுக்கொடுப்பது பழகிய தோஷத்தால். அவன்