பக்கம்:திருக்குறள் செய்திகள்.pdf/150

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
136


கையிலே காசு வந்துவிட்டால் அவனைப் பிடிக்கவே முடியாது. அவன் ஆடினதுதான் ஆட்டம்; வெறிபிடித்து அலைவான்; நெறி தவறுவான்.

அப்பப்பா! இந்த மாதிரி ஆள்களோடு பழகாமல் இருந்தால் தப்பித்தோம். யாருக்கும் எவருக்கும் எந்த இலாபமும் இல்லை. படித்த பெரிய மனிதர் கூட்டத்திலே கால் வைக்கவே இவனுக்கு அருகதை கிடையாது.

85. புல்லறிவாண்மை

பேதைமை என்பது முற்றிலும் அறியாமை. புல்லறிவாண்மை என்பது தெரிந்தும் தவறாக நடப்பது. முட்டாள் என்று ஒருசிலரை அழைத்துவிடுகிறார்கள்; யார் இந்த ஆள்? எப்படி அவன் இருப்பான்? என்ன அப்படி அவன் தவறு செய்கிறான்? எதனை வைத்து இவன் அறிவின்மையைச் சாடுகிறார்கள்? இதுவும் வறுமையில் ஒரு வகை என்றே கூறலாம்.

இவன் யாருக்கும் எந்த உதவியும் செய்யமாட்டான்; இவனால் யாருக்கும் எந்தப் பயனும் இருக்காது.

இவன் தன்னைத்தானே அழித்துக்கொள்வான்; பகை வரும் அத்தகைய கேடு செய்யமாட்டார்கள்.

படிப்பு அரைகுறை; எதனையும் சரியாகப் படித்து அறியமாட்டான். ஆனால், தான் மேதாவி என்று சொல்லிச், செருக்குக்கொள்வான்.

எதனையுமே அவனால் மறைக்கத் தெரியாது; நல்ல காலம் உடம்பை மறைக்க ஆடையாவது கட்டி இருக்கிறான்; எல்லாவற்றையும் கொட்டிவிடுவான். எது சொல்லலாம்; எது