பக்கம்:திருக்குறள் செய்திகள்.pdf/154

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
140


அடுத்து இருந்து கெடுக்கக் கூடிய தீயவனை எந்த விலை கொடுத்தும் அப் பகையை முடிக்க வேண்டும்.

நற்குணங்கள் இல்லாதவனாகவும், குற்றங்கள் பல புரிபவனாகவும் இருந்தால் அவன் துணை இன்றி இருப்பான். அவன் பகையை எளிதில் வெல்ல முடியும்.

அறிவு அற்றவராகவும், அஞ்சும் இயல்பினராகவும் இருந்தால் அவர்களை வெல்வது யார்க்கும் எளியது ஆகும்.

அறநூல்களைக் கல்லாதவனாக இருந்து அநீதிகளைச் செய்வானாயின் அவனை எதிர்ப்பது கடமையாகும். அப்படி எதிர்க்காவிட்டால் இகழ்ச்சியே உண்டாகும்; புகழ் அமையாது.

88. பகைத்திறம் தெரிதல்

பகையே பொதுவாக இல்லாமல் இருந்தால் கவலை இல்லாமல் உவகையோடு வாழமுடியும்; விளையாட்டுக்குக் கூட வீண் பகை தேடிக்கொள்ளாதே.

வீரர்களின் பகையைத் தேடிக்கொண்டாலும் அறிஞர்களின் பகையைத் தேடிக்கொள்ளாதே.

தனி ஒருவனாக இருந்து பலரோடு பகைகொண்டால் அவன் பித்தம் பிடித்தவன் என்றே மதிக்கப்படுவான்.

பகைவரையும் நட்பினராக மாற்றிக்கொள்ளும் ஆற்றல் உடையவன் எல்லா வகையிலும் உயர்வு பெறுவான்.

பகைவர் இருவர்; நீ ஒருவன்; உன்னால் என்ன செய்ய முடியும்? அந்த இருவரில் ஒருவனை உன்பக்கம் சேர்த்துக்