பக்கம்:திருக்குறள் செய்திகள்.pdf/165

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
151


(3) அதிக உணவு விரும்பாதே;

(4) பசி அளவு அறிந்து அளவாக உண்க.

இந் நான்கு விதிமுறைகளைக் கடைப்பிடித்தால் நோய் மிகுதியாக வாராது. வேறு சில புதிய நோய்கள் வருகின்றன: தடுப்புக்கு வழி கூறலாமேயன்றித் தீர்ப்பதற்கு அவ்வளவு எளிதாகக் கூறிவிட முடியாது; குடிப்பழக்கம் நோய் தரும்: புகைபிடிக்கக் கூடாது. தீய ஒழுக்கங்கள் பயங்கரமான நோய்களை உண்டாக்கும். இவற்றை எல்லாம் உடம்புக்கு ஒவ்வாதனவற்றுள் அடக்கிவிடலாம். அளவோடு உண்பது வளமான வாழ்வுக்கு வழிவகுக்கும்.

96. குடிமை

குடிமை என்பது நாட்டுப்பற்றைக் குறிப்பதாகும்; இந்த நாட்டின் குடிமகன் என்ற தகுதியை உண்டாக்கிக் கொள்வது என்பது ஆகும்.

“பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் வானினும் உயர்ந்தவை” என்று மதிக்க வேண்டும். இதனைச் சிறிய அளவில் குறிப்பிட்டால் குடும்பப் பற்று என்றும் கூறலாம். ஒருவன் பிறந்த வீடு அவன் வளர்ச்சிக்கு உதவுவதாகும்.

நேர்மையும் நாணமும் நற்குடிப் பிறந்தவரிடத்தே தான் அமையும். ஒழுக்கம், வாய்மை இவையும் அவர்களிடம் அமையும். மற்றும் எப்பொழுதும் மலர்ச்சியோடு விளங்குதல், சிரித்த முகம் அவர்களை இனியவர்கள் ஆக்குகின்றன. பேசும் சொல் என்றால் அஃது இனி தாகவே இருக்கும்; பிறரை வருத்தாத சொற்கள் அவை. இல்லை என்று சொல்லாத இயல்பு அவர்கள்தம்