பக்கம்:திருக்குறள் செய்திகள்.pdf/166

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
152

ஈகையைக் காட்டுவது ஆகும். பிறரை இகழ்ந்து பேச மாட்டார்கள்.

கோடிப் பொன் கொண்டுவந்து கொட்டித் தந்தாலும் கீழ்மையான செயலுக்கு இவர்கள் இடம் கொடுக்க மாட்டார்கள். வறுமை வந்து அவர்களை வாட்டத் தொடங்கினாலும் அவர்கள் ஈதலைத் தவிர்க்கமாட்டார்கள், நற் பண்புகளில் இருந்து நழுவமாட்டார்கள்.

வஞ்சனை, சூது இவற்றை அவர்கள் அறியமாட்டார்கள். அவர்களிடம் சிறிது குற்றம் காணப்பட்டாலும் மற்றவர்கள் கண்களுக்கு அவை புலப்பட்டுக்கொண்டு இருக்கும்.

ஒருவனிடம் அன்பு ஆகிய நற்பண்பு இல்லை என்றால் அவன் கீழ்மகனாகவே கருதப்படுவான்; உயர்குடிக்குத் தகுதி இருக்காது. நிலத்தில் வெளிப்படும் முளை அதன் இயல்பைக் காட்டிவிடும். அதுபோல நற்குலத்தில் பிறந்தவர் வாய்ச்சொல் அவர்கள் இயல்பை வெளிப்படுத்திவிடும்.

சிறப்பாக அவனிடம் நாணம் உள்ளதா? என்று எதிர்பார்ப்பர்; மேலும் பணிவுடைமையும் எதிர்பார்ப்பர். இவை குடும்பத்தின் வளர்ப்பினால் அமைவன ஆகும். முந்திரிக்கொட்டை மாதிரி எதுவும் தான்தான் என்று தலை காட்ட மாட்டான். அடக்கமும் பணிவும் அவனை ஒளிவிடச் செய்யும்.

97. மானம்

மானம் என்றால் உயர்வு என்று பொருள்படும்; உச்சியை அடைந்தவர் உயரத்தைவிட்டு இறங்க விரும்பமாட்டார்கள். இவர்கள் முதற்கண் குடிப் பெருமையை விட்டுக்கொடுக்க மாட்டார்கள். புகழ்