பக்கம்:திருக்குறள் செய்திகள்.pdf/181

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
167


வயிற்றுக்குச் சோறு என்று பயிற்றிக் கூறுவதும் ஒப்புக் கொள்ள முடியாத ஒன்று ஆகும். பசித்தாலும் புலி புல்லைத் தின்னாது.

கூழ் ஆனாலும் உழைத்து உண்பதில் தனி மகிழ்ச்சி உண்டு. அதனைவிட வேறு இன்பம் இருக்க முடியாது.

பகவுக்கு நீர் வேண்டும் என்று கேட்டாலும் அது பிழைதான்; அது கேட்ட நாவுக்கு இழிவு உண்டாக்கும்.

மறுக்கும் உலோபிகளிடம் மட்டும் தயவு செய்து போய்க் கேட்காதீர்கள். இரப்பவருக்கு அது பெருத்த அவமானமாகும்.

கடலில் அலைவுறும் மரக்கலம் போன்றது எளியவரின் தாழ்வு; அவர்கள் வாழ்வு பாறையில் மோதக் கூடாது. ஈயாதவர்கள் பாறை போன்றவர்கள்.

இரப்பாரின் துயரத்தைக் கண்டால் கல்லும் கரைந்து விடும்; மனம் உருகும்; ஈயாதவரின் கரவுள்ளத்தைக் கண்டால் மனம் கருகும்.

இரப்பவன் உயிர் நடுங்கும்; ஈயாதவர் இல்லை என்று கூறும்போது அவன் நடுங்குவதே இல்லை; அஃது எப்படி? வியப்பாகத்தான் இருக்கிறது.

108. கயமை

கயமை என்பது சூழ்ச்சியால் எதனையும் சாதிப்பது என்று கூறலாம். அறக்கொள்கைகளைக் காற்றில் பறக்க விட்டுக் கீழ்மையாக நடந்துகொள்வது கயமை என்றும் கூறலாம். நாடகங்களில் கதாநாயகன் நன்மைக்குப்