பக்கம்:திருக்குறள் செய்திகள்.pdf/193

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
179



“கண் இமைத்தால் காதலர் மறைவார் என்பதனால் யான் உறங்குவது இல்லை; இதனை இந்த ஊரார் புரிந்து கொள்ளாமல் காதலர் பிரிவு அதனால்தான் யான் தூங்க வில்லை என்று பிழைபடப் பேசுகின்றனர்.”

“என் உள்ளத்தில் அவர் உறைகிறார். இத்னை அறியாதவர்கள் கள்ளத்தில் அவர் பிரிந்துவிட்டார் என்று பேசுகிறார்கள்.”


114. நாணுத் துறவு உரைத்தல்
(வெட்கம் விட்டுப் பேசுதல்)


தலைவன் கூற்று

“அன்றில் இணைந்து வாழும் பனைமரத்தைத் தடிந்து கொண்டுவந்து நிறுத்துவேன்; மடவேறுவதைத் தவிர அவளை அடைவதற்கு வழியே தென்படவில்லை. அதுவே தக்க வழியாகும்.”

“ஆமாம்! வெட்கப்பட்டு என்ன பயன்? வெளியே சொல்லக்கூடாதுதான்; முடியவில்லையே! என் வீரம்: ஆண்மை எல்லாம் தோற்றுவிட்டன. வேறு வழியே இல்லை; மடலேற வேண்டியதுதான்.”

“சின்னப் பெண்தான்; அந்தப் பேரழகி என்னைச் சீண்டிவிட்டாள். வேறு வழியில்லை; மடலேறுவது தவிர வேறு வழியே இல்லை. எந்த நேரமானாலும் எனக்கு என்ன? நடுயாமம் ஆனாலும் இந்த இடத்தைவிட்டு விலகப் போவது இல்லை."