பக்கம்:திருக்குறள் செய்திகள்.pdf/208

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
194

கூட வெறுத்து ஒதுக்க முடியவில்லை. நீ அவரைக் கொடியவர் என்று இப்பொழுது என்னிடம் கூறுகிறாய; இது வெறும் நடிப்பு.”

“காதல் அதனை விடவேண்டும்; அதனை விடமுடியாது என்றால் வெட்கத்தை விட்டு வெளிப்படையாகப் பேச வேண்டும். எதையாவது ஒன்றனை நெஞ்சே செய்க.”

“பிரிந்தவர் நமக்கு அருள் செய்யார்; அவர்பின் நீ செல்வது ஏன்? மடமைதான்.”

“உள்ளத்தில் காதலர் இருக்கும்போது நீ வெளியே எங்கே சென்று தேடப்போகிறாய்? வீண் முயற்சி.”

“முற்றும் துறந்துவிட்டார்; இனி நாம் என்ன செய்ய முடியும்? அவரை நினைந்து நினைந்து அழகை இழக்க வேண்டியதுதான்.”


126. நிறை அழிதல்

தலைவி கூற்று

“நாணம் தாழ்ப்பாள்; நிறை கதவு, காமவேட்கை கோடரி; இது நாணத்தையும் நிறையையும் உடைத்து விடுகிறது.”

“காமம் இரக்கமற்றது; நடு இரவிலும் என்னைத் தூங்கவிடாமல் துயர் தருகிறது.”

“காமத்தை மறைக்கின்றேன்; தும்மல் கட்டுமீறி வெளிப்படுவது போல் என்னைக் காட்டிக் கொடுத்து விடுகிறது."