பக்கம்:திருக்குறள் செய்திகள்.pdf/209

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
195


“நிறை உடையவள் என்று பெருமை கொண்டிருந்தேன்; காமம் என்னை நடுத் தெருவுக்குக் கொண்டு நிறுத்திவிடுகிறது”

“வெறுத்து ஒதுக்கியவர் பின் செல்லக் கூடாது என்ற வீறாப்பு எல்லாம் காமநோய் உற்றால் செயல்படுத்த முடியாத ஒன்று.”

“வெறுத்து நீங்கிய அவர்பின் என்னை நிறுத்துகிறது இக் கொடிய காமநோய்; நான் என்ன செய்வது? தோற்று விட்டேன்.”

“அவர் என்னைத் தொடும்போதும் என்னைத் தழுவ வரும்போதும் என் நாணம் என்னைவிட்டு நழுவி விடுகிறது.”

“மயக்கிப் பேசும் இனியர்; அவர் பணிந்த மொழிக்கு என் பெண்மை தோற்றுவிடுகிறது; என்னை அவர்க்குத் தந்துவிடுகிறேன்.”

“புலப்பது என்று உறுதியாக இருப்பேன்; என் நெஞ்சு அவரோடு கலத்தல் விரும்புகிறது; இனி அவரைத் தழுவிக் கொள்வது தவிர வழியே இல்லை.”

“மெழுகு தீயிற்கு உருகிவிடுகிறது; அத்தகைய இளகிய நெஞ்சு எனது; அவரைக் கண்டால் உருகி விடுகிறேன்; என் நிறை கருகிவிடுகிறது.


127. அவர்வயின் விதும்பல்

தலைவி கூற்று

“நோக்கி நோக்கி என் கண்கள் ஒளி இழந்துவிட்டன; என் விரல்கள் நாள் எண்ணி எண்ணிச் சுவரில் தொட்டுத் தொட்டுத் தேய்ந்துவிட்டன."