பக்கம்:திருக்குறள் செய்திகள்.pdf/214

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
200


“கண்களால் சிறிது ஊடிவிட்டு உடனே கூடுவதில் என்னை அவள் முந்திக்கொண்டாள்.”


130. நெஞ்சொடு புலத்தல்
(தலைவி தன் நெஞ்சொடு மாறுபடுதல்)

“அவர் நெஞ்சு அவரைவிட்டு இங்குப் பாய்வ தில்லை; கட்டுக்குள் அடங்கி இருக்கிறது. நீ மட்டும் ஏன் சொன்ன பேச்சுக் கேட்கமாட்டேன் என்கிறாய்! இங்கேயே அடங்கி இரு என்றால் இருக்கமாட்டாய்; அவரை நாடிச் செல்கிறாய்.”

“அவர் நம்மிடம் அன்பு காட்டவில்லை; அழையாத வீட்டுக்குள் நீ ஏன் நுழைகிறாய்! விழைந்து உன்னை வரவேற்பார் என்று கருதிச் செல்கிறாய்; உன் முயற்சி வீண் முயற்சி ஆகும்.”

“கெட்டுப் போனவர்க்கு நண்பர்கள் உதவ வேண்டும் என்ற பரந்த மனப்பான்மையால் தனித்து இருக்கும் அவருக்குத் துணையாக நீ செல்ல நினைக்கிறாயா!”

“ஊடல் செய்து அவரிடம் ‘பிகு’ பண்ணிக்கொள்ள வேண்டும் என்று மன உறுதியோடு இருக்கும் என்னை மாற்றிவிடுகிறாய்; அவர் பக்கம் சாய்ந்துவிடுகிறாய்; நீ என் கட்சியைவிட்டு எதிர்கட்சியில் சேர்ந்துவிடுகிறாய்; உன்னை நம்பி உன்னோடு எதனையும் கலந்து ஆலோசிப்பதால் என்ன பயன்?”

“கவலைக்கே காவல் செய்யும் அவலநிலைக்கு நீ ஆளாகிறாய்; அவரை அடையாதபோது அதற்காகக்