பக்கம்:திருக்குறள் செய்திகள்.pdf/24

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
10


ஒருவன் தன்மானத்தோடு வாழ்கிறான் என்றால் அதற்குத் துணை செய்கிறவள் மனைவி; அவள் உத்தமி என்று. பெயர் வாங்கினால் அதனால் அவனுக்குப் பெருமை சேர்கிறது; பகைவர் முன் பீடுநடை அமைய ஈடு இணையற்ற மனைவியின் மாண்பும் காரணமாக அமைகிறது; நடத்தை கெட்ட மனைவி அமைந்தால் அவன் நாலு பேர் முன் தலைநிமிர்ந்து நடக்க நானுவான்.

ஒரு வீட்டுக்கு மங்கலமாக விளங்குபவள் நற்குண நற்செயல்களுடைய மனைவி; இந்தக் குடும்பத்துக்கு அழகு சேர்ப்பது நன்மக்களைப் பெறுதல். எனவே இல்வாழ்க்கை மக்கட்பேற்றுக்குத் துணை செய்வதாகும். வாழ்க்கைத் துணைவியாகிய மனைவியும், தாம் பெறுகின்ற மக்களும் நல்லவர்களாக அமைய வேண்டும். அப்பொழுதே இல்வாழ்க்கை நல்வாழ்க்கையாக ஒளிவிடும்; பயன்படும்; நிறைவுபெறும்.

7. மக்கட்பேறு

மக்கள் மதிக்கத்தக்க செல்வமாவர்; இதனைவிட அரிய செல்வம் வேறு ஒன்றும் இருக்க முடியாது என்று திட்பமாகக் கூறமுடியும். பிறக்கும் மக்கள் அறிவு உடைய மக்களாக வளர வேண்டும்; இல்லை என்றால் மக்களைப் பெற்றும் மிக்க பயன் இல்லை. எனவே பெறுவதைவிட அவர்களை வளர்ப்பது பொறுப்புமிக்க செயலாகும்.

மக்கள் பெற்றோர்த்ம் சுமையைக் குறைப்பவர்களாகப் பயன்பட வேண்டும். அவர்கள் சுமைகளாகப் பெற்றோர்களுக்கு ஆகக்கூடாது; பணிவுமிக்கவர்களாகவும், பழிகளைக் கூட்டும் வழிகளைத் தேடாதவர்களாகவும் நடந்துகொள்ள