பக்கம்:திருக்குறள் செய்திகள்.pdf/29

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
15

அவள் என்றோ கூற முடியாது. “ஆள் பார்க்க நன்றாகத்தான் இருக்கிறான்; ஆனால் அவன் யாருக்கும் உதவமாட்டான். அவனால் எந்தப் பயனும் இல்லை” என்றுதான் உலகம் பேசும்; அவனை ஏசும்.

அன்பின் வழியேதான் உயிர் நிலைத்து இருக்கிறது. அன்பு இல்லை என்றால் அவன் வெறும் சடப்பொருள் தான். எலும்பைத் தோல் போர்த்திக்கொண்டு இருக்கிறது என்றுதான் அத்தகையவனைப் பற்றிக் கூற முடியும்; இரத்தம் சதை உடையவர் என்றுகூட அவனைப்பற்றிக் கூற முடியாது.

9. விருந்தோம்பல்

வீடு என்ற ஒன்றும், அதற்கு ஒரு முகவரி என்றும் வைத்துக்கொண்டு குடும்பம் நடத்துவது எல்லாம் விருந்தினரை உபசரித்து, அவர்களை உணவு அருந்தவைத்து அன்பு காட்டுவதற்கே; திண்ணைக்கு வெளியே நிற்க வைத்துவிட்டு வெண்ணெய் கலந்த வெண்சோறு ஆயினும் தின்று சுவை கண்டால் பன்றிக்கும் அவனுக்கும் என்ன வேறுபாடு உள்ளது? அமுதமேயாயினும் விருந்தினரை வெளியே இருக்கச் சொல்லிவிட்டுத் தனியே உண்ண நினைப்பது அநாகரிகம்; அற்பத்தனமும் ஆகும.

நம்பினார் கெடுவதில்லை; இது மறைகளின் தீர்ப்பு: விருந்தினரை ஒம்பியவரும் கெடுவது என்றுமே இல்லை; அவன் செல்வம் வற்றாத ஊற்றாகப் பெருகக்கொண்டே இருக்கும்; விருந்தினர் வருவதும் போவதுமாக இருக்க “இங்கு என்ன சிறப்பு?” என்று அதனைக் காண வெளியே செல்வமகளாகிய திருமகள் காத்துக் கிடப்பாள்; அவள்