பக்கம்:திருக்குறள் செய்திகள்.pdf/45

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
31


செல்வச் செருக்கால் அல்லல் விளைவிக்கும் செயலை மற்றொருவன் உனக்குச் செய்கிறான். அவனுக்குத் திருப்பி நன்மையே செய்துபார்; திருந்திவிடுவான்.

பொறுமை என்பது எளிய செயல் அன்று; பிறர் தரும் துன்பங்களையும் தீமைகளையும் தாங்கிக்கொள்ள வேண்டும். அந்த வகையில் அஃது ஒரு தவமே; துறவு உள்ளம் இருந்தால்தான் இந்தத் துன்பங்களைத் தாங்கிக் கொள்ள முடியும். விரதங்களை ஏற்றுத் தவம் புரியும் துறவிகளைவிடச் சந்ததமும் பிறர் செய்யும் தீமைகளைத் தாங்கிக்கொள்ளும் பொறுமைசாலிகள் உயர்ந்தோர் என்று மதிக்கப்படுவர்.

17. அழுக்காறாமை

அழுக்காறு என்பது பொறாமையைக் குறிக்கும் சொல்லாகும்; அது கூடாது என்பதே இங்குக் கூறப்படுகிறது; எதிர்மறைச் சொல்லாகும். பொறாமை என்பது பிறர் நன்கு வாழ்வதனைக் கண்டு மனம் அழுங்குதல்; அது கூடாது என்று அறிவிக்கவே அழுக்காறாமை என்ற தலைப்புத் தரப்பட்டுள்ளது.

பிறர் செல்வமும் நல்வாழ்வும் கண்டு நீ புழுங்கினால் உன் மனம் அழுக்குப் படிகிறது; வெளிச்சம் மறைந்து விடுகிறது. அதனால் நீ இருட்டில் தடுமாறுகிறாய்; உன் சொந்த முயற்சியும் குறைகிறது; மற்றவனைக் கெடுக்கும் தீய எண்ணங்களும் மலர்கின்றன. அத்தீயில் நீ கருகிவிட வாய்ப்பு உள்ளது.

அழுக்காறு அதனை உடையவனை அழித்துவிடும். காற்றும் மழையும் வந்தால் முன்னெச்சரிக்கையாகத் தடுத்து