பக்கம்:திருக்குறள் செய்திகள்.pdf/99

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
85


52. தெரிந்து வினையாடல்
(ஆராய்ந்து செயற்படுதல்)


பந்தாடச் சென்றாலும் அதனை உதைக்கத் தெரிந்திருந்தால் மட்டும் போதாது; விதிமுறைகளுக்கு உட்பட வேண்டும். அப்பொழுதுதான் அதனை ஆட்டம் என்று கூறுவர். அதனைக் கோட்டத்திற்குள் போடவேண்டும்; அப்போதுதான் அவன் வெற்றியடைந்தான் என்று ஆகும்.

நீ தேர்ந்து எடுத்துக்கொள்ளும் வினையும் அத்தகையதே. தொடங்கிவிட்டால் போதாது; அதனைச் செம்மையாகச் செயல்படுத்த வேண்டும். ‘எங்கள் வீட்டுக்காரரும் கச்சேரிக்குப் போகிறார்’ என்று ஒரு தொழிலைத் தொடங்கிவிட்டு அங்குப் போய்க்கொண்டு இருந்தால் போதாது.

இதனை இப்பொழுது எடுத்துச் செய்தால் அதற்கு விற்பனைச் சந்தை இருக்கிறதா? விற்பனை ஆகுமா? போட்டியில் வெல்ல முடியுமா? தொழிலாளர் கிடைப்பார்களா? கருவிகள் அமையுமா? தொழில் தொடங்கும் இடம் சரிதானா? என்று எல்லாம் கவனித்துச் செய்ய வேண்டும். இலாபம் கருதி அதனை அடைய முடியாமல் முதல் இழக்கும் வினையை யாரும் செய்ய மாட்டார்கள்.


இந்தத் தொழிலைச் செய்வதற்கு நீ தேர்ந்து எடுக்கும் ஆள், அவன் தகுதிகள், யோக்கியதை எல்லாம் ஆராய்ந்து தக்கவனைப் பணிசெய்யத் தேர்ந்து எடுக்க வேண்டும்.

அடிப்படையில் அவன் அன்பாகப் பழகுகிறானா? மற்றவர்களை வெறுக்காமல் நடந்துகொள்வானா? மனித