பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி

127

சிறியவர், (451); படை தேய்ந்து குறைந்து சிறிய தாதல், மன்னன் செய்யும் அவமதிப்பு, (769); துன்பம், (934); சிறுமையுடை யார், (978, 980); சிறிய தன்மை, (979); துயர், (1231). சிறுமைக்கு = தீய பண்புகளால் சிறியவனாவதற்கு உண்டாகும் சிறுமைத் தனம், (505). சிறுமைத்து = மிகச் சிறிய அளவை

யுடைய, (889). சிறுமையுள் = நோய் தன்மையுள், (98). சிறை = அடைத்து வைக்கும் இடம்,

(57); அரண், (499, 569). சிற்றினஞ்சேராமை = திருக் குறளில் வரும் 46-வது அதிகாரம் இது. தீமைகள் பல வகைக் குற்றங் களுக்குக் காரணமாக அமையும். அத்தகையக் செய்பவர்களோடு, சிந்தனை யாலும், அறிவாலும், பண்பாலும் செயலாலும் சேராதிருத்தலே

செய்யும்

குற்றங்களைச்

சிறந்ததாகும். காரணம், இவர்கள் சிற்றினம் என்பவர்களாவர். இழிந்தக் குணங்களும் செயல் களும் உடைய இத்தகையாரைச் சிற்றினம் என்று கூறுவர் சான் றோர்கள். அவர்களோடு சேரா மையே சிறந்தது என்பதற்கான அறிவுரைகள் கூறும் பகுதி இது. சிற்றின்பம் = நிலையற்ற சிறுசிறு

இன்பம், (173). சினத்தாற்றி - தவறு நேரும் போது,

சினத்தைச் செலுத்தி, (568). சினத்தான் = கோபங் கொண்டவன்,

(866). சினத்தின் = வெகுளியைவிட,

கோபத்தைவிட, (304). சினத்து = வெகுளியாகிய குற்றத்

தின், (568). சினத்தை= கோபத்தை, வெகுளியை,

(307, 310). சினம் = கோபம், (301, 431). சினைப்பது = உண்டாவது போலத்

தோன்றி, (1203).

ஜீ

சீரல்ல = தம் குடிப்பெருமையைச்

சீரழிக்கார் (962),

சீரல்லவர் = பெருமைக்குத் தகுதி

யற்றக் கீழ் மக்கள் (977).

சீரழிக்கும் = புகழைச் சீர் குலைத்து

விடும், (934).

சீரார் = சிறப்புடையவர், ஆன்மீகப்

பெரியோர்கள், (900),

சீனிடம் = வாய்ப்பான இடம், தகுந்த

இடம், (821).

சீரினும் = புகழ் தேடுமிடத்தும்,

(962).

சீ = அளவு, (118); சிறப்பு, ஆற்றல் பெருமை, (499); வீரம், (778); புகழ், (934, 962, 977).

சீர் குன்றல் இலர் = வீரம் குன்றாத இயல்புடையவர்கள், (778).

சீர் துக்கும் = நிறுத்து அளக்கும், (118); அளந்து பார்க்கும், (813).

- க்க = காலம் வந்த விடத்தில், (490).

சீர்மை = சிறப்பு, (123); மதிப்பு,

ஒழுக்கம், (490).

சீறின் = சினம் கொண்டு சீறினால்,

(568, 899).