பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/211

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் ஞான மரம்; அறமரம்; வாழை மரம்!

அறம் - பொருள் - இன்பம் - வீடு என்பன நூல்களின் உள்ளுறை: மறைகளின் உட்பொருள் என்பன மட்டுமல்ல; நூல்களும் மறைகளுமெல்லாம் உலகியற்கையின் வடிப்புகளே யாதலின், உலகிற் காணப்படும் எல்லாப் பொருள்களின் உள்ளுறையாகவும், பாடம் புகட்டி அறிவு தெருட்டும் வழி வகைகளாகவும், அவை விளங்குகின்றன.

வாழை மரம் இங்கே எடுத்துக் கொள்ளலாம்; உலகப் பொருள்களுள் அதுவும் ஒன்று என்பதோடு, முக் கனிகளிலும் சிறந்த் முதன்மைக் கனிவளம் உடைய தகுதியான மரம் அது

அதனை ஞான மரம் என்றும், ஞானத்திலும் ஞான சன்மார்க்க மரம்' என்றும்; அறத்துக்கு ஒரு மரம் என்றும் கூறுவதுண்டு.

வாழை மரம் தல மரமாக இருக்கும் பதிகளில் எல்லாம், ஞானத் தொடர்பு அமைந்திருப்பது கண்கூடு; திருக்கழுக்குன்றத்தின் தலமரம் வாழைதான்.

ஞான சன்மார்க்கப் பெரியாராகிய மாணிக்க வாசகர்; இறைவனுடைய ஞானத் திருவடிகளை வைக்குமிடமாகத் தேர்ந்து, அதனால் கழுகு பதி திருவடித் தலமாகத் திகழ்கின்றது.

வடலூர் வள்ளலார், அடியார் மரபுக்கு இதனை உவமமாகக் கொண்டு, 'வாழையடி வாழையென வந்த திருக்கூட்டம்' என்று அருளிச் செய்வார்.

வாழை; ஏனை எல்லா உயிர்களையும்விட, ஆறறிவும், அறவுணர்வும் மிக உடைய மக்களினத்துக்குப் பேருதவியாகவும், அடியார் திருக் கூட்டத்துக்கு இணையாகவும் இருத்தலால், உயர்ந்த இனத்தோடு சேரும் அதன் உயர்ந்த திறம் ஊன்றி நினைந்து உளத்தற் குரியது:

இத்தகைய பெருந் தகுதிகளையுடைய வாழை மரத்தில், உறுதிப் பொருள் நான்கும் உள்ளுரையா யிருத்தலும் நன்கு தோற்றுகின்றது.

வாழை மரத்தின் தோற்றம் வழு வழுப்பாய், ஒழுங்காய், நீண்டு, பசிய இலைகள் உடையதாய், மிக அழகாய் காட்சியளிக்கின்றது.

அதன் அழகு, கண்டார் கண்களைக் கவ்வுந் திறத்தது. 'தகையணங்கு உறுத்தல் என்றே இதனைச் சொல்லி விடலாம். கை புனைந்தியற்றாத இக் கவின் காட்சியை என்னென்பது! வீடுகளிலுந் - தோட்டங்களிலும் மங்கலக்