பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/220

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

248 திருக்குறள் சொற்பொருள் கரபி

அகரம் முதல் எழுத்து எல்லாம் ஆதி

உலகு பகவன் முதற்று ஏ என்பது சொற்களைப் பிரித்து மொழி மாற்றியமைத்தது. மேற் செய்யுட்களுக்கெல்லாம் சொற் பிரித்தலை மட்டும் குறிக்க 'ப' என்பதையும், அதனோடு மொழி மாற்றையும் குறிக்க பி. மா என்பதையும் குறிக்கப்படும்.

பொருள் :- அகரம் முதல் - அகரத்தை முதலாக உடைய எழுத்து -

எழுத்துக்களும், எல்லாம் - அவ்வெழுத்துகளாலாகிய சொற்களும், அச்சொற்களால் பெறப்படும் பொருள்களுமாகிய எல்லாம். ஆதி - முதன்மையினின் தோன்றியவை. உலகு பகவன் முதற்று - மக்கள் பகவனை முதல்வனாகக் கொள்ளத் தக்கவர்.

கருத்து உலகும், உயிர்களும், மற்றுள்ளவைகளும் ஆதி என்பதினின்று தோன்றியவை. ஆயினும் உலக மக்கள் பெறத்தக்க பேறு மெய்யுணர்வு ஒன்றே.

ஏ - ஈற்றசை. முதல் குறிப்புப் பெயரெச்சம். மலா, காய (அகம்) என வந்தன. காண்க. ஆதி - வட சொல்லன்று. தூய தமிழ்ச் சொல்லே. அஃது ஆதல் எனப் பொருள்படும் தொழற் பெயர். ஆ - முதல் நிலை, தி - இறுதி நிலை. செய்தி, உய்தி என்பவற்றிற் போல. ஆதி - முதன்மை ஒரு பொருள் சொற்கள். இதை வடவர் மூலப் பிரகிருதி என்பர்.

ஆதியாவது எல்லாப் பொருளும் தோன்றுதற்கிடமாவது. இதை

தனையறிவரிதாய்த் தாமுக் குணமாய் மனநிகழ் வின்றி மாண்பமைப் பொருளாய் எல்லாப் பொருளும் தோன்றுதுற் கிடமெனச் சொல்லுதல் மூலப் பகுதி. (மணி - சமய 203 - 206)

என்பதாலும் அறிக. காமம், வெகுளி, மயக்கம் ஆகிய மூன்று பண்புகளும் ஒன்றுபட்ட நிலை ஆதி என்று உணரப்படும். அவற்றின் கலங்கிய நிலையே இவ்வுலக மெல்லாம் என்க. எல்லாம் ஆதி என்றதால், உலகம் ஆதி அல்லது முதன்மையினின்று தோன்றியது என்றவாறாயிற்று. எல்லாம் ஆதியினின்று தோன்றின என்னாது எல்லாம் ஆதி என்றது என்னையெனில் காரணத்தில் உள்ளதே காரியத்திலும் உள்ளது என்னும் உள்ளது சிறத்தல் (சற்காளியவாதம்) ஆனதோர் முறை கொண்டு மகனறிவு, தந்தையறிவு (நாலடி) என்பதுபோல. எல்லாம் எழுவாய் ஆதி - பயனிலை.

பகவன் வடசொல் அன்று. பகல் எனப் பொருள்படும் பகவு ஆண்பால் இறுதிநிலை. பெற்றது. பகல் - அறிவு ஆகுபெயர். உணர்வு எனலும் அஃது பகவன் ஆண்பாலாற் சொல்லப்படினும், பகவு அஃதாவது உணர்வு என்றே கொள்க. மேலைச் செய்யுட்களிலும் இவ்வாறே.