பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/225

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறளுக்குரிய காரணப் பெயர்கள்

1. முப்பால், 2. பொய்யாமொழி, 3. வாயுறை வாழ்த்து, 4. உத்தரவேதம், 4. தெய்வ நூல், 5. திருவள்ளுவர், 6. தமிழ்மறை, 7. பொதுமறை, 9. திருவள்ளுவப் பயன், 10. பொருளுரை, 11. பொதுமொழி, 12. அறம்

திருவள்ளுவருக்கு வழங்கும் பெயர்கள்

1. தேவர், 2. தெய்வப் புலவர், 3. பொய்யில் புலவர், 4. முதற்பாவலர், 5. பெருநாவலர், 6. மாதாதுபங்கி, 7 செந்நாப் போதார், 8. நாயனார், 9. நான்முகனார், 10. புலவர், 11. திருக்குறளார்.

திருவள்ளுவருக்கு வடமொழி சூட்டிய பெயர்

தஞ்சை நகரிலுள்ள சரசுவதி பண்டாரத்தில், திருக்குறட் மொழி பெயர்ப்பாய் அமைந்த வடநூல் ஒன்று உள்ளதெனவும், இது நூறு வருஷங்களுக்கு முன்பிருந்த ஸ்மஸ்கிருத பண்டிதர் ஒருவர் இயற்றியது என்றும், இவர் குறளாசிரியரை வல்லபாசாரியார் என்ற பெயரால் வழங்கியுள்ளார் என்றும் கூறுபவர் யார் தெரியுமா?

இதைக் கூறியவர் டாக்டர் பூரீமாந், பி.எஸ். சுப்பிரமணிய சாஸ்திரிகள் என்னிடம் ஒருகால் அறிவித்த செய்தி இங்கே குறிப்பிடத்தக்கது.

- மு. இராகவையங்கார்

(சேது சமஸ்தானம் புலவர், வரலாற்றாசிரியர், பெரும்புலவர், 'செந்தமிழ் இதழ், தொகுதி 8, 1910-ஆம் ஆண்டு பதிப்பு.