பக்கம்:திருக்குறள் தெளிவுரை–முதற்படிவம்.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35. பொச்சாவாமை காரியத்தில் சோர்வு படாமை. உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றுந்தான் உள்ளியது உள்ளப் பெறின். (ப-உ) தான் உள்ளியது-தான் செய்ய நினைத்த காரியத்தை, மற்றும்_மேலும் மேலும், உள்ளப் பெறின்-முயற்சியுடன் நினைக்கப் பெற்றால், உள்ளியது-அந் நினைத்த காரியத்தை, எய்தல்-அடைதல், எளிதுமன்-மிகவும் சுலபம். (க-உ) சோராமல் நினைத்துச் செய்தால்தான் காரியம் கை கூடும். எய்தல்-எழுவாய் எளிது-பயனிலை. 36. செங்கோன்மை நல்ல செங்கோல் ஆட்சியின் தன்மை. வான்நோக்கி வாழும் உலகெலாம் மன்னவன் கோல்நோக்கி வாழும் குடி. (ப-உ) உலகு எலாம்-(பொதுவாக) உலகத்து உயிர்கள் எல்லாம், வான் நோக்கி-ஆகாயத்திலிருந்து வரும் மழையை எதிர்பார்த்தே, வாழும்-வாழ்கின்றன. (ஆனாலும்), குடி-குடி மக்கள், மன்னவன்-அரசனுடைய, கோல் நோக்கி-நல்ல செங்கோல் ஆட்சியை எதிர்பார்த்தே, வாழும்-வாழ்வார்கள். (க.உ) நல்ல செங்கோலையே குடிகள் விரும்புவார்கள். குடி-எழுவாய் வாழும்-பயனிலை. 24