பக்கம்:திருக்குறள் தெளிவுரை.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவுரை பொருள் மானம் கட்டாயம் செய்ய வேண்டியன என்றாலும் பெருமைக்குக் குறைவானவற்றைச் செய்யற்க. 961 பெருமையொடு பேராற்றல் வேண்டுபவர் புகழ்களில் மானக் குறைவானவை செய்யார். 962 வளம் பெருகும்போது பணிவு வேண்டும்: வளம் சுருங்கும்போது பெருமிதம் வேண்டும். 96.3 மக்கள் உயர்ந்த தரத்திலிருந்து இறங்கினால் தலையிலிருந்து விழுந்த மயிர் போல்வர். 964 குண்டுமணி அளவு தரக்குறைவாக நடந்தால் மலைபோல் உயர்ந்தவரும் தாழ்வர். 965 மதியாதார் பின்னே மானங்கெட்டு நிற்பதேன்? புகழ் வருமா? தேவருலகு கிடைக்குமா? 966 பகைவருக்குப் பின்போய் வாழ்ந்தான் என்பதினும் மானத்தோடு கெட்டான் என்பது நல்லது. 96.7 மானத்தின் ஏற்றம் அழியும் நிலையில் உடலை வளர்த்தல் உயிருக்கு மருந்தாகுமா? 96.8 மயிர் பறிப்பின் இறக்கும் கவரிமான் போன்றவர் மானம் போவதாயின் உயிரைப் போக்குவர். 96.9 இழிவு நேர்ந்தால் சாகும் மானமுடையவரின் புகழ் விளக்கை உலகம் தொழுது போற்றும். 970 196 குடியியல் அதிகாரம் 97 மானம் இன்றி யமையாச் சிறப்பின ஆயினும் குன்ற வருப விடல். 961 சீரினும் சீரல்ல செய்யாரே சீரொடு பேராண்மை வேண்டு பவர். 962 பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய சுருக்கத்து வேண்டும் உயர்வு. 963 தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர் நிலையின் இழிந்தக் கடை 964 குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ குன்றி அனைய செயின். - 965 கழ்இன்றால் புத்தேள்நாட்டு உய்யாதால் என்மற்று சென்று நிலை. 966 ட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையே ម្ដុំ எனப்படுதல் நன்று. 967 மருந்தோமற்று ஊன்ஓம்பும் வாழ்க்கை பெருந்தகைமை பீட்ழிய வந்த இடத்து. 968 . மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார் உயிர்நீப்பர் மானம் வரின் . 969 இளிவரின் வாழாத மானம் உடையார் ஒளிதொழுது ஏத்தும் உலகு. 970 † 97