பக்கம்:திருக்குறள் தெளிவுரை.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவுரை பெருமை ஊக்கம் மிகுதியே ஒருவர்க்கு மதிப்பாகும்: அதனை விட்டு வாழ்தல் என்பது குறைவாகும். ஒரு தாய் வயிற்று மக்களுக்குள்ளும் செயல் வேற்றுமையால் சிறப்பு வேறுபடும். மேலிருந்தும் மேலான செய்யாதார் சிறியவர்: கீழிருந்தும் கீழான செய்யாதார் பெரியவர். மகளிர் கற்பைத் தாமே காத்தல் போலப் பெருமையும் அவரவர் காத்தால் உண்டு. பெருமையைக் காத்துக் கொண்டவர் முறையாக அருமையான காரியங்களைச் செய்து முடிப்பர். பெரியவர்களைப் போற்றிக் கொள்ளும் கருத்து சிறியவர்கள் அறிவிற் படுவதில்லை. சிறப்புக்கள் இழிந்தவர்களைச் சேருமாயின் தாறுமாறான காரியங்களே நடக்கும். என்றும் பணிதல் பெருமையின் இயல்பு: தற்புகழ்ச்சி பாடுதல் சிறுமையின் இயல்பு. தற்செருக்கு இன்மை பெருமையின் குணம்; தற்செருக்கின் வடிவு சிறுமையின் குணம். பிறர் குற்றம் மறைத்தல் பெருமையின் இயல்பு: குற்றமே கூறுதல் சிறுமையின் இயல்பு. 1 98 பொருள் 971 972 973 974 975 97.6 977 978 979 980 குடியியல் அதிகாரம் 98 பெருமை ஒளிஒருவற்கு உள்ள வெறுக்கை இளிஒருவற்கு அஃதிறந்து வாழ்தும் எனல் 971 பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான். 972 மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும் கீழல்லிர் கீழல் லவர். 973 ஒருமை மகளிரே போலப் புெருமையும் தன்னைத்தான் கொண்டொழுகின் உண்டு. 974 பெருமை உடையவர் ஆற்றுவார் ஆற்றின் அருமை உடைய செயல் 975 சிறியார் உணர்ச்சியுள் இல்லை பெரியாரைப் பேணிக்கொள் வேம்என்னும் நோக்கு. 976 இறப்பே புரிந்த தொழிற்றாம் சிறப்புந்தான் சீரல் லவர்கட் படின். 977 பணியுமாம் என்றும் பெருமை சிறுமை ಸಿಹಿ தன்னை வியந்து. - 978 பெருமை பெருமிதம் இன்மை சிறுமை ధౌ ஊர்ந்து விடல். 979 அற்றம் மறைக்கும் பெருமை சிறுமைதான் குற்றமே கூறி விடும். 98 199