பக்கம்:திருக்குறள் தெளிவுரை.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவுரை பொருள் குடிசெயல் வகை குடும்பக்கடமை செய்யப் பின்வாங்கேன் என்ற பெருமைபோலப் பெருமையுடையது வேறில்லை.1021 நீண்ட முயற்சியும் நிறைந்த அறிவும் என்ற இரண்டின் பெருஞ்செயலால் குடி பெருகும். 1022 குடும்பத்தை உயர்த்துவேன் என்பானுக்குத் தெய்வம் வரிந்து கட்டிக்கொண்டு முன்வரும். 1023 தன்குடும்பம் கீழாகாமல் உழைக்கின்றவனுக்கு இயல்பாக எல்லாம் தானே நிறைவேறும். 1024 குற்றமின்றிக் குடும்பம் காத்து வாழ்பவனைச் சுற்றமாக உலகம் சுற்றிக் கொள்ளும்: 1025 ஒருவர்க்கு நல்லவீரம் என்பது தான்பிறந்த வீட்டுப்பொறுப்பைத்தனதாக்கிக்கொள்ளுவதே. 1026 போரில் பொறுப்பு பெருவீரரையே சாரும்; வீட்டுச்சுமை தாங்கவல்லார்மேலே விழும். 102.7 கடமை செய்வார்க்குக் காலம் என்பது இல்லை; சோம்பி வீண்பெருமை கருதின் குடிகெடும். 1028 குடும்பத்தைக் குற்றப்படாமல் காப்பவனது உடம்பு துன்பத்தின் உறைவிடமோ? 1029 முட்டுக் கொடுக்கும் ஆளில்லாத குடும்பம் துன்பம் தாக்கினால் அடியோடு விழும். 1 0 30 208 குடியியல் அதிகாரம்103 - குடிசெயல் வகை கருமம் செயஒருவன் கைதுவேன் என்னும் ப்ெருமையின் பீடுடையது இல். 1021 ள்வினையும் ஆன்ற அறிவும் எனஇரண்டின் ੰ நீளும் குடி 1022 குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம் ம்டிதற்றுத் தான்முந் துறும். 1023 குழாமல் தானே முடிவெய்தும் தம்குடியைத் த்ாழாது உஞற்று பவர்க்கு. 1024 குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச் சுற்றமாச் சுற்றும் உலகு. 1025 நல்லாண்மை என்பது ஒருவற்குத் தான்பிறந்த இல்லாண்மை ஆக்கிக் கொளல். 1026 அமரகத்து வன்கண்ணர் போலத் தமரகத்தும் ஆற்றுவர் மேற்றே பொறை. - 1027 குடிசெய்வார்க்கு இல்லை பருவம் மடிசெய்து ம்ானம் கருதக் கெடும். 1028 இடும்பைக்கே கொள்கலுங் கொல்லோ குடும்பத்தைக் குற்றம் மறைப்பான் உடம்பு. 1029 இடுக்கண்கால் கொன்றிட வீழும் அடுத்தூன்றும் நல்லாள் இலாத குடி - 1030 209