பக்கம்:திருக்குறள் தெளிவுரை.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவுரை இன்பம் புணர்ச்சி மகிழ்தல் கண்டு கேட்டு உண்டு முகர்ந்து தொடும் ஐம்புல இன்பமும் இவளிடமே உண்டு. , 1101 நோய்வேறு அதற்கு மருந்து வேறு: இவள் தந்த நோய்க்கோ இவளே மருந்து, 1102 தன்காதலியின் மென்தோளில் துயிலுதலைவிடத் திருமாலின் மேலுலகம் இனிதாமோ? 1103 நீங்கினால் சுடும், நெருங்கினால் குளிரும்; இன்ன தீயை இவள் எங்கிருந்து பெற்றாள்? 1 104 பூங்கொத்து நிறைந்த கூந்தலவள் தோள்கள் விரும்பியபோது விரும்பிய பொருள் ஆகியவை. 1105 உடல் அணையுந்தோறும் உயிர் தழைத்தலால் இவளுக்குத் தோள்கள் அமிழ்தால் ஆயவை. 1 106 அழகிய மாநிறப் பெண்ணைத் தழுவுதல் தன்வீட்டிலிருந்து தன்பங்கை உண்பதுபோல். 1107 காற்றும் புகாதபடி தழுவும் தழுவல் காதலர் இருவர்க்கும் பேரின்பமாம். 1108 பிணங்குதல் தெளிதல் சேருதல் இவை இன்பக் கூட்டுறவினர் பெற்ற பயன்கள். 1109 நகையுடையாளைக் கூடுந்தோறும் காமவுணர்ச்சி அறிய அறிய அறியாமையை அறிவதுபோலும். 1110 226 அதிகாரம் 11 புணர்ச்சி மகிழ்தல் கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும் களவியல் ஒண்டொடி கண்ணே உள. 110t பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை தன்நோய்க்குத் தானே மருந்து. 1102 தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல் தாமரைக் கண்ணான் உலகு. 1103 நீங்கின் தெறுஉம் குறுகுங்கால் தண்ணென்னும் தீயாண்டுப் பெற்றாள் இவள், 104 வேட்ட பொழுதின் அவையவை போலுமே தோட்டார் கதுப்பினாள் தோள். 1105 உறுதோறு உயிர்தளிர்ப்புத் தீண்டலால் பேதைக்கு அமிழ்தின் இயன்றன தோள். 1106 தம்மில் இருந்து தமதுபாத்து உண்டற்றால் அம்மா அரிவை முயக்கு 1107 வீழும் இருவர்க்கு இனிதே வளியிடை போழப் படாஅ முய்க்கு. - 1108 ஊடல் உணர்தல் புணர்தல் இவைகாமம் கூடியார் பெற்ற பயன். 1109 அறிதோறு அறியாமை கண்டற்றால் காமம் செறிதோறும் சேயிழை மாட்டு. 1110 227