பக்கம்:திருக்குறள் தெளிவுரை.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவுரை இன்பம் புணர்ச்சி விதும்பல் நினைக்கவும் காணவும் மகிழ்ச்சி தருதல் கள்ளுக்கு இல்லை; காமத்திற்கு உண்டு. 1281 பனையளவு காமவேட்கை பெருகுமாயின் தினையளவுகூட ஊடுதல் ஆகாது. 1282 புறக்கணித்துத் தாம் விரும்பியனவே செய்தாலும் காதலனைக் காண்ாமல் என்கண்கள் பொருந்தா.1283 தோழி! நான் ஊடச் சென்றேன். என் நெஞ்சோ அது மறந்து கூடச்சென்றது. 1284 மைதீட்டுங்கால் துரிகை கண்ணுக்குத் தெரியாது: அவரைக்கண்டபோது பழி எனக்குத் தெரியாது. 1285 காணும்போது அவர் பிழையைக் காண்பதில்லை; காணாதபோது பிழைதவிர வேறு காண்டதில்லை.1286 க்ரைசேர்த்தலை அறிந்து நீரில் பாய்வதுபோல் பொய் என்று தெரிந்தும் வாடிப் பயன் என்ன? 1287 இழிவான துன்பங்கள் செய்யினும், கள்வனே! நின்மார்பு குடியர்க்குக் கள் போன்றது. 1288 காமவுணர்வு மலரைவிட மென்மையானது: அதன் பக்குவம் அறிந்து துய்ப்பார் மிகச்சிலரே. 1289 தழுவுதற்கு என்னைவிடத் தான் துடிதுடித்துக் கண்ணால் ஊடிக் கலங்கினான். 1290 262 கற்பியல் - அதிகாரம் 129 - புணர்ச்சி விதும்பல் உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும் கள்ளுக்கில் காமத்திற்கு உண்டு. 1281 காமம் நிறைய வரின். 1282 பேணாது பெட்பவே செய்யினும் கொண்கனைக் காணாது அமையல கண். 1283 ஊடற்கண் சென்றேன்மன் தோழி அதுமறந்து கூடற்கண் சென்றது.என் நெஞ்சு 1284 எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கன் பழிகாணேன் கண்ட விடத்து. 邯285 ಶ್ಗ காணேன் தவறாய காணாக்கால் காணேன் தவறல் லவை. 1286 உய்த்தல் அறிந்து புனல்பாய் பவரேபோல் பொய்த்தல் அறிந்தென் புலந்து. 1287 இளித்தக்க இன்னா செயினும் களித்தார்க்குக் கள்ளற்றே கள்வநின் மார்பு. 1288 மலரினும் மெல்லிது காமம் சிலர்அதன் செவ்வி தலைப்படு வார். - 1289 கண்ணின் துனித்தே கலங்கினாள் புல்லுதல் என்னினும் தான்விதுப் புற்று. 1290 263