பக்கம்:திருக்குறள் தெளிவுரை.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவுரை புலவி தழுவாது இருந்து பினங்குக: அப்போது அவர் படும் துன்பத்தைச் சிறிது காண்போம். ஊடல் உணவுக்கு உப்பளவு போன்றது: ஊடல் மிகுவது உப்புக் கூடுவது போலும். பிணங்கிய மகளிரைத் தழுவாது விடுதல் வருந்தியவரை மேலும் வருத்துதல் போலாம். ஊடிய மகளிரை உணராத் தன்மை வாடிய கொடியை அடியோடு அறுத்தது போலும். நற்பண்பு உடைய ஆடவர்க்கு அழகு மலரன்ன மகளிரின் ஊடலை நீக்குதல். துணியில்லாக்காமம் பழம் ஒக்கும்: புலவி யில்லாக் காமம் பிஞ்சு ஒக்கும். கூட்டம் நீளாதா என்று ஐயப் படுதலின் ஊடலிலும் ஒரு துன்பம் உண்டு. @orus 1301 1302 1303 •1304 1305 1305 1307 கூடுதற்கு வருந்தினார் என்று ஊடலைப் புரியும் காதலர் இல்லாத போது வருந்திப் பயன்ென்? நீரும் நிழலிடத்தே குடித்தல் இனியது: பிணக்கமும் விரும்புவாரிடத்தே இனியது. ஊடலை வாடிவிடுவாரோடு எண்மனம் கூட நினைப்பது வெறும் ஆசையே. 266, 1308 1309 1310 கற்பியல் அதிகாரம் 131 புலவி புல்லா திராஅப் புலத்தை அவர்உறும் அல்லல்நோய் காண்கம் சிறிது. 1301 உப்பமைந் தற்றால் புலவி அதுசிறிது - மிக்கற்றால் நீள விடல். 1302 அலந்தாரை அல்லல்நோய் செய்தற்றால் தம்மைப் புலந்தாரைப் புல்லா விடல். 1303 ஊடி யவரை உணராமை வாடிய வள்ளி முதலரிந் தற்று. - 1304 நலத்தகை நல்லவர்க்கு ஏளர் புலத்தகை பூஅன்ன கண்ணா ரகத்து. 1305 துனியும் புலவியும் இல்லாயின் காமம் . கனியும் கருக்காயும் அற்று. 1306 ஊடலின் உண்டாங்கோர் துன்பம் புணர்வது நீடுவ தன்றுகொல் என்று. 1307 நோதல் எவன்மற்று நொந்தாரென்று அ.தறியும் காதலர் இல்லா வழி. 1308 நீரும் நிழலது இனிதே புலவியும் ழுநர் கண்ணே இனிது. 1309 ஊடல் உணங்க விடுவாரோடு என்நெஞ்சம் கூடுவேம் என்பது அவா. 1310 267