பக்கம்:திருக்குறள் தெளிவுரை.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவுரை இன்பம் புலவி நுணுக்கம் பரத்தையர் உன்னைக் கண்ணால் நுகர்வர்; ஆதலின் பரத்தனே! நின் மார்பு தீண்டேன். 1311 பேசாது காடியபோது தும்மினார்; அவரை நீடுவாழ்க என்று சொல்வேனென நினைத்து. 1812 குவியாத கோட்டுப்பூவைச் சூடினும் ஊடாத பரத்தையைக் காட்டச் சூடியதாகச் சினப்பாள். 1813 யாரையும் விடக் காதல் உடையோம் என்றதும் யாரைவிட யாரைவிட என்று பிணங்கினாள். 1814 இப்பிறப்பில் பிரிய மாட்டோம் என்றதும் மறுபிறப்பில் பிரிவுண்டா என்று அழுதாள். 1315 நினைத்தேன் என்றேன். திரும்ப நினைக்குமாறு முன் ஏன் மறந்தீர் என்று தழுவாது ஊடினாள். 1316 தும்மினேன் வாழ்த்தினாள்: திரும்ப அழுதாள் யார் நினைத்ததால் தும்மல் வந்ததென்று. 1317 வந்த தும்மலை அடக்கினேன். அதற்கும் அழுதாள் உம்பெண்டிர் நினைப்பதை ஒளிக்கிறீர் என்று. 1318 அவள் ஊடலைப் பணிந்து நீக்கினாலும் காய்வாள்; பிறரிடமும் இங்ங்ணந்தானே நடப்பீர் என்று. 1319 அவள் அழுகை உற்றுநோக்கினாலும் காய்வாள்; யாரோடு ஒப்பு நோக்கினி என்று. 1320 - 2鲇岛 கற்பியல் அதிகாரம் 132 புலவி நுணுக்கம் பெண்ணியலார் எல்லாரும் கண்ணின் பொதுஉண்பர் நண்ணேன் பரத்தநின் மார்பு 1311 ஊடி யிருந்தேமாத் தும்மினார் யாம்தம்மை நீடுவாழ் கென்பாக்கு அறிந்து. 1312 கோட்டுப்பூச் క్టి காயும் ஒருத்தியைக் காட்டிய சூடினிர் என்று. யாரினும் காதலம் என்றேனா ஊடினாள் யாரினும் யாரினும் என்று. 1314 இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக் கண்ணிறை நீர்கொண் டனள். 1315 உள்ளினேன் என்றேன்மற்று என்மறந்தீர் என்றென்னைப் புல்லாள் புலத்தக் கனள். 1316 வழுத்தினாள் தும்மினே னாக அழித்தழுதாள் யாருள்ளித் தும்மினீர் என்று. - 13节 தும்முச் செறுப்பு அழுதாள் நூமர்உள்ளல் எம்மை மறைத்திரோ என்று. ້ 1318 தன்னை உணர்த்தினும் காயும் பிறர்க்குநீர் . இந்நீரர் ஆகுதிர் என்று. - 1319 நினைத்திருந்து நோக்கினும் காயும் அனைத்துநீர் யாருள்ளி நோக்கினிர் என்று. 1320 269