பக்கம்:திருக்குறள் தெளிவுரை.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவுரை அறம் வெஃகாமை நேர்மை யின்றிப் பிறர்பொருளைக் கவர்ந்தால் உடனே குடியழிந்து குற்றங்கள் பெருகும். 171 கொள்ளை விரும்பிக் கூடாதன செய்யார் நேர்மைக்கு அஞ்சும் பெரியவர். 172 சிறுநலத்தை விரும்பிக் கொடியவை செய்யார் பெருநலத்தை நாடுபவர். 1 T 3 ஆசைகளை அடக்கிய உயர்ந்த அறிஞர் இல்லை என்பதற்காகப் பிறர்பொருளை நாடார். 174 எவர்பொருளையும் நச்சிக் கொடுமை செய்தால் நுணுகிப் பரந்த அறிவால் பயன் என்ன? 175 அருளை நாடி உரியவழியில் நிற்பவன் பிறர் பொருளைக் கவர நினைப்பின் கெடுவான். 176 பிறர்பொருளால் வரும்விளைவு மிகப் பொல்லாது: ஆதலின் தீய முன்னேற்றத்தை வேண்டாதே. 177 தன் செல்வம் குறையாமைக்கு வழி யாது? பிறன் செல்வத்தைப் பறிக்க விரும்பாமை. 178 முறையறிந்து பிறர் பொருளை விரும்பாத அறிஞரைத் தெரிந்து திருமகள் அடைவாள். 17 9 பின்வருவது பாராமல் விரும்புவது அழிவு: வேண்டாம் என்னும் பெருமிதம் வெற்றி. 180 36 இல்லறவியல் அதிகாரம் 18 வெஃகாமை நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக் குற்றமும் ஆங்கே தரும். 171 படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார் நடுவன்மை நானு பவர். 17շ சிற்றின்பம் வெஃகி அறனல்ல செய்யாரே மற்றின்பம் வேண்டு பவர். 173 இலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற புன்மையில் காட்சி யவர். 174 அஃகி அகன்ற அறிவென்னாம் யார்மாட்டும் வெஃகி வெறிய செயின். 175 அருள்வெஃகி ஆற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப் பொல்லாத சூழிக் கெடும். - 176 வேண்டற்க வெஃகியாம் ஆக்கம் விளைவயின் மாண்டற் கரிதாம் பயன். 177 அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை வேண்டும் பிறன்கைப் பொருள். 178 அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும் திறன்அறிந் தாங்கே திரு. 179 இறல்ஈனும் எண்ணாது வெஃகின் விறல்ஈனும் வேண்டாமை என்னுஞ் செருக்கு. 180 37