பக்கம்:திருக்குறள் தெளிவுரை.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவுரை அறம் புறங்கூறாமை ஒருவன் அறத்தைப் பழித்துத் தீமை செய்யினும் கோள் சொல்லான் என்பது காதுக்கு இனியது. 181 அறம் அழித்துச் செய்யும் தீமையினும் தீது புறத்தே இகழ்ந்து முன்னே புகழ்வது. 182 கோள்சொல்லி நடித்து உயிர் வாழ்தலினும் சாவது நல்லது; அறத்தின்பயன் கிடைக்கும். 183 எதிரே கடுமையாகச் சொல்லினும் சொல்லலாம்; ஆளில்லாத போது கோள் சொல்லற்க. 184 இவன் நெஞ்சத்தில் நேர்மை இல்லை என்பது கோள் சொல்வதிலிருந்துகண்டு கொள்ளலாமே? 185 பிறரது குறையை நீதேடிக் கூறின் உன் பெரிய குறையை மற்றவர் விடுவாரோ? 1 86 மகிழ்ந்து பேசி நட்புச் செய்யத் தெரியாதவர் கோள்சொல்லி நண்பரையும் பிரித்து விடுவர். 187 பழகியவர் குற்றத்தையே நூற்றித் திரிபவர் பழகாதவரிடம் எப்படி எப்படியோ? 188 போனது பார்த்துப் புறங்கூறுபவனை உலகம் சுமக்கிறது; அதுவும் ஓர் அறமோ? 189 பிறர்குறை காண்பதுபோல் தங்குறை கானின் வாழும் உயிர்க்குத் தீது உண்டோ? 19 () 38 இல்லறவியல் அதிகாரம் 19 புறங்கூறாமை அறங்கூறான் அல்ல செயினும் ஒருவன் புறங்கூறான் என்றல் இனிது. 181 அறனழீஇ அல்லவை செய்தலின் தீதே புறனழீஇப் பொய்த்து நகை. 182 புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல் அறங்கூறும் ஆக்கம் தரும். 183 கண்நின்று கண்ணறச் சொல்லினும் சொல்லற்க முன்இன்று பின்நோக்காச் சொல். 184 அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும் புன்மையாற் காணப் படும். - 185 பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளும் திறன்தெரிந்து கூறப் படும். 186 பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி நட்பாடல் தேற்றா தவர். - 187 துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார் என்னைகொல் ஏதிலார் மர்ட்டு. 188 அறன்நோக்கி ஆற்றுங்கொல் வையம் புறன்நோக்கிப் புன்சொல் உர்ைப்பான் பொறை. 189 ஏதிலார் குற்றம்போல் தன்குற்றங் காண்கிற்பின் தீதுண்டோ மன்னும் உயிர்க்கு. 190 39