பக்கம்:திருக்குறள் தெளிவுரை.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவுரை வெகுளாமை பலிக்குமிடத்துச் சினவாதவனே காப்பவன்; பலியா இடத்து எப்படி நடந்தால் என்ன? பலிக்காத இடத்துக் கோபிப்பது இது: பலிக்கும் இடத்தும் அதுபோல் தீயது இல்லை. யார்மேலும் சினத்தை மறந்து விடுக; மறவாவிடின் தீமைகள் பிறந்துவிடும். முகமலர்ச்சியையும் அகமலர்ச்சியையும் கொல்லும் சினத்தினும் பிறபகை உண்டோ? நீ வாழவேண்டின் சினத்தை ஒழிக்க ஒழிக்காவிடின் சினம் உன்னை ஒழிக்கும். சினத்தி சினங்கொண்டானையும் கொல்லும்: இனமாகிய துணையையும் எரிக்கும். சினத்தைப் போற்றிக்கொண்டவன் கெடுவன், தரையைக் குத்தியவனுக்குக் கைவலியாதா? பூங்கொத்தை நெருப்பில் இட்டாற்போலக் கொடுமைகள் செய்யினும் கோபம் Hai...trol. மனத்தாலும் வெகுளியை மறந்துவிடின் நினைத்த எல்லாம் உடனே கிடைக்கும். சினத்தில் மிக்கவர் செத்தவர்க்கு ஒப்பாவும்: சினத்தை விட்டவர் துறவியர்க்கு ஒப்பவர். 62 அறம் 301 302 303 304 305 307 309 3 l (; துறவறவியல் அதிகாரம் 31 வெகுளாமை செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக் காக்கின்என் காவாக்கால் என். 301 செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும் இல்அதனின் 蠶 பிற. 302 மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய பிறத்தல் அதனான் வரும். 303 நகையும் உவகையும் கொல்லும் சினத்தின் பகையும் உளவோ பிற. SO4 தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால் தன்னையே கொல்லும் சினம். 305 சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும் ஏமப் புணையைச் சுடும். &O6 சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு நிலத்தறைந்தான் கையின்ழயா தற்று. . 307 இணர்எரி தோய்வன்ன இன்னா செயினும் புணரின் வெகுளாமை நன்று. 3O8 உள்ளிய வெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால் உள்ளான் வெகுளி எனின். 309 இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத் துறந்தார் துறந்தார் துணை. 310 63