பக்கம்:திருக்குறள் தெளிவுரை.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவுரை பொருள் செங்கோன்மை (நல்லாட்சி) கேட்டு ஒருபக்கம் சாயாது தண்டித்து யாரையும் ஆராய்ந்து செய்வதே நீதி. 541 உயிரெல்லாம் மழையை எதிர்பார்த்து வாழும்: குடியெல்லாம் நல்லாட்சியை நோக்கி வாழும். 542 அருளாளர்தம் நூலுக்கும் அறத்துக்கும் அடிப்படை அரசனது ஆட்சியே. 543 குடிகளை அணைத்து ஆளும் பெருவேந்தனது அடிகளைப் பற்றி உலகம் நிற்கும். 544 முறையாக அரசாளும் மன்னவன் நாட்டில் மழையும் விளைச்சலும் இரண்டும் இருக்கும். 545 அரசனுக்கு வெற்றி தருவது வேலில்லை; அவனது நேரான செங்கோல் ஆட்சியே. 5.46 நாட்டை யெல்லாம் அரசன் காப்பான்: குறையற்ற நீதி அவனைக் காக்கும். 547 இரக்கமாகப் பார்த்து முறைவழங்கா அரசன் தன் குற்றத்தால் தானே கெடுவான். 548 நற்குடியைக் காத்துத் தீயகுடியைத் தண்டித்தல் பழியில்லை; வேந்தனது கடமை. s49 கொடியவர்க்கு அரசு கொலைத்தண்டனை செய்தல் பயிர்வளரக் களைபறிப்பது போலும், 550 1 12 அரசியல் அதிகாரம் 55 செங்கோன்மை ர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும் தர்ந்துசெய் வஃதே முறை. 541 வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன் கோல்நோக்கி வாழும் குடி 542 அந்தணர் நூற்கும் ஆறத்திற்கும் ஆதியாய் நின்றது மன்னவன் கோல். 543 குடிதழிஇக் கோலோச்சும் மாநில மன்னன் அடிதழீஇ நிற்கும் உலகு. 544 இயல்புளிக் கோலோச்சும் மன்னவன் நாட்ட பெயலும் விளையுளும் தொக்கு. 545 வேலன்று வென்றி ಶಿಡ್ಗಿ மன்னவன் கோலதூஉம் கோடா தெனின். 546 இறைகாக்கும் வையக மெல்லாம் அவனை முறைகாக்கும் முட்டாச் செயின். 547 எண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன் தண்பதத்தான் தானே கெடும். 548 குடிபுறங் காத்தோம்பிக் குற்றம் கடிதல் வடுவன்று வேந்தன் தொழில். 549 கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ் களைகட் டதனொடு நேர். 550 113