பக்கம்:திருக்குறள் தெளிவுரை.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவுரை பொருள் வெருவந்த செய்யாமை தக்கபடி ஆய்ந்து மேலும் குற்றம் செய்யாவாறு பொருந்தத் தண்டிப்பவனே வேந்தன். 561 நெடுநாள் ஆக்கம் நிலைக்க விரும்புபவர் வன்மையாக ஓங்கி மெல்ல அடிப்பாராக. 562 குடிகளை மிரட்டும் கொடிய வேந்தன் கட்டாயம் விரைந்து அழிவான். 563 அரசன் கடுமையன் என்று குடிகள் கூறின் இடஞ்சுருங்கி விரைந்து அழிவான். 564 பார்க்க அருமையும் முகங்கடுமையும் உடையவன் பெருஞ்செல்வம் பேய்காத்தது போலும். 565 கண்ணிலும் சொல்லிலும் கடுமையன் ஆயின் அவன் நெடுஞ்செல்வம் நாளாகாமல் கெடும். 56.6 கடுஞ்சொல்லும் அளவுகடந்த தண்டனையும் அரசனது படைவலியை அறுக்கும் அரம். 567 அரசன் அமைச்சரைக் கலந்து செய்யாது சினங்கொண்டு செய்யின் செல்வம் சுருங்கும், 568 போர்க்காலத்துத் தீயகுடியைச் சிறையிடாத அரசன் கலங்கி வெதும்பி அழிவான். 569 கடும்ஆட்சி அரசியல் கல்லாதவரையே கவரும்: நாட்டுக்குப் பாரம் அவ்வாட்சியே, பிறிதில்லை. 570 1 16 அரசியல் அதிகாரம் 57 வெருவந்த செய்யாமை தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால் ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து. 561 கடிதோச்சி மெல்ல எறிக நெடிதாக்கம் நீங்காமை வேண்டு பவர். - 562 வெருவந்த ಳ್ವ வெங்கோல னாயின் ஒருவந்தம் ஒல்லைக் கெடும். 563 இறைகடியன் என்றுரைக்கும் இன்னாச்சொல் வேந்தன் உறைகடுகி ஒல்லைக் கெடும். 564 அருஞ்செவ்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம் பேஎய்கண் டன்னது உடைத்து. 565 கடுஞ்சொல்லன் கண்ணில னாயின் நெடுஞ்செல்வம் நீடின்றி ஆங்கே கெடும். 566 கடுமொழியும் கையிகந்த தண்டமும் வேந்தன் அடுமுரண் தேய்க்கும் அரம். 567 இனத்தாற்றி எண்ணாத வேந்தன் சினத்தாற்றிச் சீறின் சிறுகும் திரு. 568 செருவந்த போழ்திற் சிறைசெய்யா வேந்தன் வெருவந்து வெய்து கெடும். 569 கல்லார்ப் பிணிக்கும் கடுங்கோல் அதுவல்லது இல்லை நிலக்குப் பொறை. 570 1 1 7