பக்கம்:திருக்குறள் தெளிவுரை.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவுரை பொருள் நாடு குறையாத விளைச்சலும் நடுநிலைமை யாளரும் சோர்விலாத வணிகரும் உடையது நாடு. 731 பொருட் பெருக்கத்தால் விரும்பத் தக்கதும் கேடின்றி மிக விளைவதும் நாடு. 732 வரும் சுமையெல்லாம் தாங்கி அரசனுக்கு வரியெல்லாம் கொடுப்பதுவே நாடு. 733 தீராப்பசியும் தீரர்நோயும் தீராப்பகையும் இல்லாது நடப்பதுவே நாடு. 734 பலகட்சி, உட்பகை அரசினை ஆட்டும் - காலிக் கூட்டம் இல்லாததே நாடு. 735 கேடறியாது கெட்டாலும் வளங்குறையாது என்ற நாடே தலையான நாடு. 736 அகழியும் வாய்ப்பான மலையும் அருவியும் வன்மதிலும் நாட்டின் உறுப்புக்கள். 737 நோயின்மை செல்வம் விளைச்சல் இன்பம் காவல் ஐந்தும் நாட்டிற்கு அணி என்பர். 738 தன்னிறைவுடைய வளநாடே உரிமை நாடு: பிறநாட்டை எதிர் நோக்கும் நாடு நாடன்று. 739 மேலைச் சிறப்பெல்லாம் இருந்தும் பயனில்லை நல்லாட்சி இல்லாத நாடு. - 740 150 அமைச்சியல் அதிகாரம் 74 நாடு தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச் செல்வரும் சேர்வது நாடு. 731 பெரும்பொருளால் பெட்டக்க தாகி அருங்கேட்டால் ஆற்ற விளைவது நாடு. 732 பொறையொருங்கு மேல்வருங்கால் தாங்கி இறைவற்கு இறையொருங்கு நேர்வது நாடு. 733 உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும் சேரா தியல்வது நாடு. - 734 பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும் స్లీప్జి ಫ நாடு. யும் 735 கேடறியாக் கெட்ட விடத்தும் வளங்குன்றா நாடென்ப நாட்டின் தலை. 736 இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும் வல்லரணும் நாட்டிற்கு உறுப்பு 737 பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம் அணியென்ப நாட்டிற்கிவ் வைந்து. 738 நாடென்ப நாடா வளத்தன. நாடல்ல நாட வளந்தரு நாடு. . . . 739 ஆங்கமை வெய்தியக் கண்ணும் பயமின்றே வ்ேந்தமை வில்லாத நாடு. 740 1 51