பக்கம்:திருக்குறள் தெளிவுரை.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவுரை பொருள் பொருள் செயல்வகை மதிப்பு இல்லாதவரையும் மதிப்பு உடையராகச் செய்யும் செல்வமே சிறந்த செல்வம். 751 செல்வம் இல்லாதவரை எல்லோரும் இகழ்வர்; உடையவரை எல்லோரும் சிறப்புச் செய்வர். 752 செல்வம் என்னும் அழியா ஒளி' எவ்விடமும் சென்று இருளை ஒட்டும். 753 நெறியோடு குற்றமின்றி ஈட்டிய பொருள் - அறமும் தரும் இன்பமும் தரும். 754 அருளும் அன்பும் பொருந்தாத செல்வத்தைத் தொடாது போகவிடுக. 755 வரியும் சுங்கமும் பகைவரின் திறையும் . அரசனுக்கு வருவாய்ப் பொருளாம். 756 அன்புத் தாய் பெற்ற அருட்குழந்தை செல்வத் தாதியால் வளரும். - 757 கையிற் பொருள்வைத்துக் காரியம் செய்தல் மலையேறி யானைப்போரைப் பார்ப்பது போலாம். 758 ஈட்டுக பொருளை எதிரியின் இறுமாப்பை அறுக்கும் கருவி அதுபோல் வேறில்லை. 7.59 சிறந்த பொருளைத் திரளாக ஈட்டியவர்க்கு அறமும் இன்பமும் எளிதிற் கிடைக்கும். 760 - 154 கூழியல் அதிகாரம் 76 பொருள் செயல்வகை பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும் பொருளல்லது இல்லை ப்ொருள். 751 இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை எல்லாரும் செய்வர் சிறப்பு - 752 பொருளென்னும் பொய்யா விளக்கம் இருளறுக்கும் எண்ணிய தேயத்துச் சென்று. 753 அறன்னும் இன்பமும் ஈனும் திறனறிந்து தீதின்றி வந்த பொருள். 754 அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம் புல்லார் புரள விடல். - '755 உறுபொருளும் உல்கு பொருளும்தன் ஒன்னார்த் தெறுபொருளும் வேந்தன் பொருள். 756 அருளென்னும் அன்பீன் குழவி பொருளென்னும் செல்வச் செவிலியால் உண்டு. 757 குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்று உண்டாகச் செய்வான் வினை. 758 செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும் எஃகதனிற் கூரியது இல் 759 ஒண்பொருள் தாழ்ப்ப இயற்றியார்க்கு எண்பொருள் ஏனை இரண்டும் ஒருங்கு. 760 155