பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

89

பொருளின்றி வறுமையுற்றோம், என்று - என்று எண்ணி, வெஃகுதல் - மற்றவர் போருளை வஞ்சித்துக் கொள்ளு வதை, செய்யார் . செய்யமாட்டார்கள்.

(க-ரை) ஐம்புலன்களையும் வென்று குற்றம் இல்லாத அறிவினையுடைய பெரியோர்கள்"யாம்.வறுமை புற்றோம்? என்று கருதிப் பிறர் பொருளைக் கவர்ந்து கொள்ள நினைக்கமாட்டார்கள்.

5. அ.கி அகன்ற அறிவென்னாம் யார்மாட்டும்

வெ.கி வெறிய செயின்.

(ப-ரை) வெஃகி - பிறர் பொருளை வஞ்சிக்கக் கருதி, யார் மாட்டும் . எல்லோரிடத்திலும், வெறிய அறிவுக்குப் புறம்பான தீயவற்றை, செயின் . செய்வார்களேயானால், அஃகி - நுண்ணியதான, அகன்ற பற்பல நூல்களையும் ஆராய்ந்த, அறிவு என்னாம் - அறிவுடைமையானது என்ன பயனைத் தருவதாகும்.

[க-ரை) பொருளை விரும்பி யாவரிடத்திலும் அறத் துடன் பொருந்தாத செயல்களை அறிவுடையோர் செய்வா ராயின், நுணுக்கமான பல நூல்களிலும் சென்ற அவர் களுடைய அறிவு என்ன பயன் உடையதாகும்?

6. அருள்வெ.கி ஆற்றின்கண் கின்றான் பொருள்வெஃகி

பொல்லாத சூழக் கெடும்.

(ப-ரை) அருள். அருள் என்பதனை, வெஃகி அடைய வேண்டி, ஆற்றின்கண் நின்றான் - நன்னெறியிலே நின்றவன், பொருள் - மற்றவனுடைய உடைமையினை, வெஃகி . விரும்பி, பொல்லாத - தீமையான வழிகளை, சூழக்கெடும் . நினைக்கக் கெட்டுவிடுவான்.

|க-ரை அருளாகிய அறம் என்பதனை விரும்பி நன்னெறியில் நின்றவன் பிறன் பொருளினை விரும்பித். இமையான வழிகளை நினைப்பானாகில் கெட்டுவிடுவான்.