பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

95

9. அறன்நோக்கி ஆற்றுங்கொல் வையம் புறன்கோக்கிப்

புன்சொல் உரைப்பான் பொறை.

(ப-ரை) புறன் நோக்கி - மற்றவன் இல்லாத நேரம் பார்த்து, புன்சொல் - குற்றமும் பழியுமான சொற்களை, உரைப்பான் - உரைப்பவனுடைய, பொறை - உடம்பு பாரத்தினை, வையம் - பூமியானது, அறம் . இதுவே: தனக்கு அறம் என்று, நோக்கி - கருதி, ஆற்றுங்கொல்தாங்கிக் கொண்டிருக்கின்றது போலும்.

(க-ரை) புறம் பேசுதலான குற்றத்தினைச் செய்து பழிச் சொற்களை உரைப்பவனுடைய உடல் பாரத்தினைத் தாங்குவதுதான் அறம் என நினைத்து இப்பூமி தாங்கிக் கொண்டிருக்கின்றது போலும்!

10. ஏதிலார் குற்றம்போல் தம்குற்றம் காண்கிற்பின்

தீதுஉண்டோ மன்னும் உயிர்க்கு.

(ப-ரை) ஏதிலார் - மற்றவர்களுடைய, குற்றம்' போல் - குற்றத்தினைக் கண்டு பேசுவது போல, தன். தன்னுடைய, குற்றம் குற்றத்தினையும், காண்கிற்பின். காணும் தன்மையுடையவரானால், மன்னும் - நிலை பெற்ற, உயிர்க்கு - அவரது உயிர்க்கு, தீது உண்டோ. உண்டாவதொரு தீமை உண்டோ?

|கடரை) மற்றவர்களுடைய குற்றத்தினைக் கண்டு. பேசுவது போலத் தன்னுடைய குற்றத்தினையும் காணும் தன்மை உடையவனானால், அவனுடைய நிலை பேறுடைய உயிர்க்கு உண்டாவதொரு தீமை. உண்டோ?