பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20. பயன் இல சொல்லாமை

(யாருக்கும் பயனில்லாத சொற்களைச் சொல்லாதிருத்தலாகும்)

1. பல்லார் முனியப் பயன்இல சொல்லுவான்

எல்லாரும் எள்ளப் படும்.

|ப-ரை) பல்லார் - நன்மக்களாகிய பலரும், முனிய. வெறுத்துக் கோபம் கொள்ளுமாறு, பயன் . யாதொரு பயனும், இல . இல்லாத சொற்களை, சொல்லு வான் - பேசுகிறவன், எல்லாரும் . எல்லா மக்களாலும், எள்ளப்படும் ஏளனஞ் செய்யப் படுவான்.

(க-ரை) அறிவுடையார் பலரும் வெறுக்கும்படியாகப் பயனில்லாத சொற்களைப் பேசுகின்ற ஒருவன் எல்லா மக்களாலும் இகழப் படுவான்.

2. பயன்இல பல்லார்முன் சொல்லல் கயன்இல

கட்டார்கண் செய்தலின் தீது,

(ப-ரை) பயன் - பயனொன்றும், இல . இல்லாத சொற்களை, பல்லார்முன் . பலருக்கு முன்பாக, சொல் லல் - சொல்லுவதென்பது, நட்டார்கண் - நண்பர் களிடத்தில், நயன் இல . நன்மையற்ற வெறுக்கத்தக்க செயல்களை, செய்தலின் இது . செய்வதைக் காட்டிலும் தீமையானதாகும்.

(கரை விரும்பத் தகாத செயல்களை நண்பர்களிடம் செய்வதைவிடப் பயனொன்றும் இல்லாத சொற்களை அறிவுடையார் பலர் முன்னே ஒருவன் சொல்லுதல் திதானதாகும்.