பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

97

3. நயன் இலன் என்பது சொல்லும் பயன்இல

பாரித்து உரைக்கும் உரை.

(ப-ரை) பயன் - பயனொன்றும், இல . இல்லாத வற்றை, பாரித்து - விரிவுபடுத்தி, உரைக்கும் . சொல்லு கின்ற, உரை - சொல்லானது, நயன் . இவன்) நீதி, இலன் - இல்லாதவன், என்பது சொல்லும் என்பதனைச் சொல்லிக் காட்டும்.

(க-ரை) பயனொன்றும் இல்லாதவற்றை ஒருவன் விரிவுபடுத்தி உரைக்கின்ற உரையானது அவன் நீதி இல்லாதவன் என்பதனைச் சொல்லிக் காட்டும்.

4. கயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப்

பண்பில்சொல் பல்லார் அகத்து. பயன்சாரா - நற்பயன் சேராத, பண்பு - குணம், இல். இல்லாத, சொல் - சொற்களை, பல்லாரகத்து - பலரிடத் திலும், (சொன்னால்) நயன்சாரா - அவை நீதியோடு சேராதவையாகி, நன்மையின் நீக்கும் - நன்மையினின்றும் அப்படிப் பட்டவனை விலக்கிவிடும்,

(க.ரை) நற்பயன் சேராத குணமில்லாத சொற்களைப் பலரிடத்திலும் ஒருவன் சொல்லுவானானால், அப்ப டிப்பட்டவனை, நற்குணங்களிலிருந்து நீக்கி விடும்.

5. சீர்மை சிறப்பொடு நீங்கும் பயன்இல

நீர்மை யுடையார் சொலின்.

(ப-ரை) பயன் - நற்பயன், இல . இல்லாதவைகளை, நீர்மை . இனிய பண்பு உடையார் - உடையவர்கள், சொலின் . சொல்லுவார்களேயானால், சீர்மை . அவர் களுடைய உயர்ச்சியானது, சிறப்புடனே - அவர்கள் பெற்றிருக்கும் நன்மதிப்புடனே, நீங்கும் - அவரிடமிருந்து விலகிப் போகும்.

தி, தெ.-7