பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98

fக ரை) நற்குணமுடைய இனிய தன்மை வாய்ந்த பெரியோர்கள், பயனில்லாத சொற்களைச் சொன்னால் அவர்களுடைய மேன்மையும் நன்மதிப்பும் நீங்கி விடும்.

6. பயன்இல்சொல் பாராட்டு வானை மகன் எனல்

மக்கட் பதடி எனல்.

(ப-ரை) பயன் - நற்பயன், இல் - இல்லாத, சொல் . சொற்களை, பாராட்டுவானை - பாராட்டிப் பன்முறை பேசுபவனை, மகன் எனல் - மனிதன் என்று கூறாதே, மக்கள் . மக்களுக்குள்ளே, பதடி - பதர், எனல் என்று கூறுவாயாக.

(கரை) பயனில்லாத சொற்களைப் பலகாலும் பாராட்டிப் பேசுபவனை மனிதன் என்று கூறாதே; மக்களுக்குள்ளே பதர் என்று சொல்லுக.

7. கயன்இல சொல்லினும் சொல்லுக சான்றோர்

பயன்இல சொல்லாமை கன்று.

|ப-ரை) நயன் - நீதியோடு, இல . சேராத சொற் களை, சான்றோர் - அறிவு நிறைந்த பெரியோர்கள், சொல்வினும் - சொன்னாலும்கூட, சொல்லுக - சொல் வாtகளாக, பயன் - யாதொரு பயனும், இல . இல்லாத சொற்களை, சொல்லாமை நன்று - சொல்லாதிருத்தல் மிகவும் நல்லதாகும்.

(கரை) சான்றோர்கள், நயமில்லாத சொற்களைச் சொன்னாலும் சொல்லுவார்களாக; பயனில்லாத சொற்களைச் சொல்லாதிருத்தல் நல்லதாகும்.

8. அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்

பெரும்பயன் இல்லாத சொல்,

(ப-ரை) அரும் - அறிதற்கு அருமையான, பயன் - பயனாக உள்ளவைகளை, ஆயும் - ஆராய்கின்ற, அறிவினார் . அறிவினையுடைய பெரியார்கள், பெரும்.