பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39

திறைவான, பயன் - பயன், இல்லாத சொல் - இல்லாத சொற்களை, சொல்லார் - சொல்லவே மாட்டார்கள்.

|க-ரை) அறிதற்கரிய நற்பயன்களை ஆய்ந்தறியும் அறிவுடையவர்கள், மிக்க பயனில்லாத சொற்களைச் சொல்ல மாட்டார்கள்.

9. பொருள்தீர்ந்த பொச்சாந்தும் சொல்லார் மருள்தீர்ந்த

மாசறு காட்சி யவர்.

(ப-ரை) மருள் தீர்ந்த அஞ்ஞானம் நீங்கிய, மாசு . குற்றம் அறு - இல்லாத, காட்சியவர் - அறிவினையுடைய சான்றோர்கள்: பொருள் தீர்ந்த - பயன்தரும் பொரு வில்லாத சொற்களை, பொச்சாந்தும் - மறந்தும் கூட,

சொல்லார் - சொல்லமாட்டார்கள். х

(கரை) அஞ்ஞானத்திலிருந்து நீங்கிய தூய அறிவினை புடைய பெரியோர்கள், பயனில்லாத சொற்களை மறந்தும் சொல்லமாட்டார்கள்.

10. சொல்லுக சொல்லில் பயன்உடைய சொல் லற்க சொல்லில் பயன் இலாச்சொல். . iப-ரை) சொல்லில் - சொற்கள் பலவற்றுள்ளும்,

பயனுடைய - பயன் தரக்கூடிய சொற்களையே,சொல்லுகம்

சொல்லுவாயாக, சொல்லில் - சொற்களில், பயன்

நற்பயன், இல - ஏதும் இல்லாத, சொல் . சொற்களை, சொல்லற்க - சொல்லாதிருப்பாயாக.

(கரை) சொற்கள் பலவற்றுள்ளும் பயன்தரக்கூடிய சொற்களைச் சொல்லுவாயாக: சொற்களில் பயனேதும் இல்லாத சொற்களைக் சொல்லாதிருப்பாயாக. :